முகப்பு /செங்கல்பட்டு /

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் விசிட் அடித்த செங்கல்பட்டு கலெக்டர்!

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் விசிட் அடித்த செங்கல்பட்டு கலெக்டர்!

X
நேரடி

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

Chengalpattu News : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சூறை கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

  • Last Updated :
  • Chengalpattu, India

தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் அவ்வப்போது விட்டு விட்டு மிதமானது முதல் அதிக கன மழை பெய்தது.

இதனால் அச்சரப்பாக்கம் மதுராந்தகம் என பல்வேறு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் விவசாயிகள் தங்களது நிலத்தில் அறுவடை செய்த நெல்லை சேமிப்பு கிடங்கில் கொள்முதலுக்காக வைத்திருந்தனர். அப்போது மழையின் காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து வீணாகியது. இதனால் விவசாயிகள் வேதனையில் இருந்து வந்தனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதற்கிடையே தற்போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சூறை கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் அண்டவாக்கம் கிராமத்தில் உள்ள திறந்தவெளி அரசு சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

First published:

Tags: Chengalpattu, Local News