முகப்பு /செங்கல்பட்டு /

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம் : கொட்டு மழையிலும் வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம் : கொட்டு மழையிலும் வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள்

X
வேதகிரீஸ்வரர்

வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை தேரோட்டம்

வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டத்தில் பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் ’ஓம் நமச்சிவாயா' கோசமிட்டு பக்தி பரவசத்துடன் தேரை இழுத்துச் சென்றனர்.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு அருகே திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாத தேரோட்ட விழா திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் திருபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான 7ஆம் நாள் திருவிழாவாகிய திருத்தேரோட்டம் நடைபெற்றது.

காலை 6.30 மணி அளவில் தொடங்கிய தேரோட்டத்தின்போது, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நான்கு மட வீதியில் தேர் பவனி செல்ல தொடங்கியபோது, சாரல் மழை பெய்யத் தொடங்கி கனமழையாக மாறியது. இந்த மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் ஓம் நமச்சிவாயா கோசமிட்டு பக்தி பரவசத்துடன் தேரை இழுத்துச் சென்றனர்.

top videos

    ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பத்தாம் நாள் தீர்த்தவாரி மற்றும் 11ஆம் நாள் மகாபிஷேகம் நடைபெற உள்ளது.

    First published:

    Tags: Chengalpet, Local News