முகப்பு /செங்கல்பட்டு /

சாதனை படைத்த செங்கல்பட்டு கூலித்தொழிலாளியின் மகள்..!

சாதனை படைத்த செங்கல்பட்டு கூலித்தொழிலாளியின் மகள்..!

X
சாதனை

சாதனை படைத்த செங்கல்பட்டு கூலித்தொழிலாளியின் மகள்

Chengalpattu News : செங்கல்பட்டு மாவட்டம் பி.வி.களத்தூர் பகுதியில் கூலி தொழிலாளியின் மகள் பிரார்த்தனா சாதனை படைத்துள்ளார்.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் பென்விழைந்த களத்தூர் பகுதியில் வசித்து வரும் லட்சுமி காந்தன் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் பிரார்த்தனா, அதே பகுதியில் உள்ள புகழேந்தி புலவர் அரசு மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். இவர், நடந்து முடிந்த பொது தேர்வில் 470 மதிப்பெண் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவரை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவரது உறவினர்கள் வெகுவாக பாராட்டினர்.

பிரார்த்தனா

இதுகுறித்து மாணவி பிரார்த்தனா கூறுகையில், “நான் நாள் ஒன்றுக்கு சுமார் 5 மணி நேரம் படித்தேன். பாடங்கள் சம்பந்தப்பட்ட சந்தேங்களை ஆசிரியர்கள் எளிய முறையில் தீர்த்துவைத்து, நன்றாக படிப்பதற்கு தினமும் ஊக்குவித்தனர். மேலும், மருத்துவர் ஆகவேண்டும் என்பதே தனது கனவு” என்று கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Chengalpattu, Local News