செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சியில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 132வது பிறந்தநாள் விழா கோலாகலமாக நடைபெற்றது.
“தமிழுக்கும் அமுதென்று பேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், புகழ்மிக்க கவிஞர், பாவேந்தர் என்று அழைக்கப்படுபவர் பாரதிதாசன். இவர் புரட்சிக்கவி என்றும் போற்றப்படுகிறார். தமிழ் இலக்கியம், இலக்கணங்களை முறையாகக் கற்று, தமிழ்மொழிக்குதொண்டாற்றியவர். இவர், தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர் என்று பன்முகத் திறனுடன் வாழ்ந்தவர்.
பாரதிதாசன் புதுச்சேரியில் 1891ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி பிறந்தார். கனகசுப்புரத்தினம்என்ற தனது இயற்பெயரை, பாரதியாரின் மீது இருந்த பற்றின் கரணமாக மாற்றி பாரதிதாசன் என்று வைத்துக்கொண்டார், அதுவே நிலைத்து நின்று புகழ்பெற்றது. இவர் தமது எண்ணற்ற படைப்புகளின் மூலம் சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு, மூடநம்பிக்கைக்கு எதிர்ப்புஎனதனது படைப்புகளை உருவாக்கி வெளியிட்டார்.
இதையும் படிங்க : நாவூற வைக்கும் சுவை.. விழுப்புரத்தில் காடை முட்டை ஸ்டிக் விற்பனை படுஜோர்..
அந்த வகையில் குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், விடுதலை வேட்கை போன்ற ஏராளமான படைப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த பாரதிதாசன் 1964ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி மறைந்தார்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 132வது பிறந்தநாள், தமிழ் கவிஞர் நாளாக நல்லூர் நத்தத்னார் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி பேரூராட்சி மன்ற தலைவர் சம்யுக்தா ஏற்பாட்டில் நடைபெற்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதில் சிறப்பாக அமைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் ராகுல்நாத் தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர் தூவி சிறப்பு செய்தனர். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பெருமாள், திமுக காஞ்சி தெற்கு மாவட்ட அவை தலைவர் இனியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Local News