செங்கல்பட்டு அடுத்த செட்டிபுண்ணியம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட கல்வி கடவுள் என்று பக்தர்களால் போற்றப்படும் ஶ்ரீயோக ஹயக்ரீவர் ஆலயம் அமைந்துள்ளது. தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் ஒரு ஹயக்ரீவர் ஆலயம் அமைந்துள்ளது. அதற்கடுத்து மிகப்பழமையான புராண காலத்து ஆலயமான இந்த செட்டிபுண்ணியம் ஶ்ரீயோக ஹயக்ரீவர் ஆலயம் அமைந்துள்ளது.
இங்கு தினசரி காலை 8 மணிமுதல் மதியம் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் ஆலயம் செயல்படும். ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் செயல்படும்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று குழந்தைகளை எல்கேஜி வகுப்பில் சேர்ப்பதற்கு முன்பாக இந்த ஆலயத்திற்கு குழந்தையை அழைத்து வந்து பெற்றோர் குழந்தையின் கையை பிடித்து ஆலயத்தின் சுவற்றில் பிள்ளையார் சுழிபோட்ட பிறகு பள்ளியில் சேர்ப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.
மாணவர்கள் தேர்வு நேரங்களில் இங்கு வந்து நோட்டு, புத்தகம், பென்சில் ரப்பர் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை புதியதாக வாங்கி பெருமாளின் பாதத்தில் வைத்து பெருமாளுக்கு அர்ச்சனைச் செய்துவிட்டுஅந்தக் கல்வி உபகரணங்களை மாணவ, மாணவிகள் தனது கல்விக்கு பயன்படுத்துவார்கள்.
செட்டிபுண்ணியம் ஶ்ரீயோக ஹயக்ரீவர் ஆலயத்தில் செங்கல்பட்டு மாவட்டம் அல்லாது சென்னை, திருவள்ளூர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று புதிய கல்வி உபகரணங்களை வாங்கிப் பெருமாளின் பாதத்தில் வைத்து அர்ச்சனைச் செய்து பெற்றுக்கொண்டதோடு ஆலயம் முழுவதும் சுவர், மரம் என ஆலய வளாகம் முழுவதிலும் தேர்வு எண்ணை எழுதி வைத்து அதிக மதிப்பெண்எடுத்துச் சாதிப்பதாக மாணவ, மாணவிகள் நம்பிக்கையுடன் செல்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறும்போது, “நாங்கள் ஆண்டுதோறும் தேர்வு நேரங்களில் இந்த ஆலயத்திற்கு வந்த கல்வி உபகரணங்களைப் பெருமாள்பாதத்தில் வைத்து அர்ச்சனைச் செய்து தேர்வு எண்ணைச் சுவற்றில் எழுதி ஹயக்ரீவ பெருமாளிடம் எங்களது வேண்டுதலை வைத்துவிட்டு நம்பிக்கையுன் தேர்வு எழுதுவோம். இதனால் எங்களது வேண்டுதல் நிறைவேறி எங்களது வேண்டுதல் நிறைவேறுகிறது” என நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Local News