முகப்பு /செங்கல்பட்டு /

மருத்துவ கழிவுகளை குப்பையில் கொட்டிய பிரபல தனியார் மருத்துவமனை.. தாம்பரத்தில் அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை..

மருத்துவ கழிவுகளை குப்பையில் கொட்டிய பிரபல தனியார் மருத்துவமனை.. தாம்பரத்தில் அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை..

மருத்துவமனைக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்

மருத்துவமனைக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்

Tambaram Private Hospital : செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே மருத்துவ கழிவுகளை குப்பையுடன் கொட்டிய ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிகுட்பட தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ கழிவுகளை முறைப்படி பாய்லர் மூலம் அழிக்காமல் குப்பையில் வீசுவதாக புகார் எழுந்தது. இதனை கண்காணித்த மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் ராஜகீழ்பாக்கத்தில் உள்ள பிரபல குழந்தைகள் நலம் மற்றும் பெண்கள் மருத்துவமனையான நியூ லைப் மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளை குப்பைகளை வீசியது கண்டுபிடிக்கப்பட்டது,

இதனையடுத்து தாம்பரம் மாநகராட்சி சுதாதாரதுறை துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் ஊழியர்கள் தகுந்த ஆதாரங்களை திரட்டிய நிலையில் அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஒரு லட்சம் அபராதம் கட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இதுபோல் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயலில் ஈடுபடும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் முதல் முறை அபராதமும் தொடர்ச்சியாக ஈடுபட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

top videos
    First published:

    Tags: Chengalpattu, Local News