முகப்பு /செங்கல்பட்டு /

குரோம்பேட்டை அமல அன்னை தேவாலயத்தில் 63ம் ஆண்டு திருவிழா கொடியேற்றம்..

குரோம்பேட்டை அமல அன்னை தேவாலயத்தில் 63ம் ஆண்டு திருவிழா கொடியேற்றம்..

X
குரோம்பேட்டை

குரோம்பேட்டை அமல அன்னை தேவாலயத்தில் கொடியேற்றம்

Amala Anai Church Chromepet : குரோம்பேட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற நூற்றாண்டு பழைமையான அன்னை அமல ஆலயத்தின் 63ம் ஆண்டு திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Last Updated :
  • Chengalpattu, India

சென்னை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற நூறாண்டு பழமையான அன்னை அமல ஆலயத்தின் 63ம் ஆண்டு விழா தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி, கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகல்கேணி பகுதியில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அமல அன்னை ஆலயத்தின் கொடியானது பூஜிக்கப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. வேளாங்கண்ணி அன்னை மாதா கோவில் போன்று அமல அன்னை ஆலயத்திற்கு என கொடியேற்ற பாடல் ஒன்று உருவாக்கப்பட்டு முதல் முறையாக அந்த பாடல் ஒலிக்கப்பட்டது.

குரோம்பேட்டை அமல அன்னை தேவாலயத்தில் கொடியேற்றம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், அமல அன்னை ஆலயத்தில் 63ம் ஆண்டு திருவிழா கொடியானது ஏற்றப்பட்டுள்ளது. பாக்கிய ரெஜிஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த 63ம் ஆண்டு திருவிழாவில் ஏராளமான கிருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

top videos
    First published:

    Tags: Chengalpattu, Local News