சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் விஜயலட்சுமி. கடந்த 4ஆம் தேதி இரவு, தன்னுடன் பணியாற்றிய ஜெயமாலா, ரம்யா உள்ளிட்ட 3 காவலர்களுடன், படப்பை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஜூஸ் கடைக்கு சென்ற காவலர்கள், வாட்டர் மெலன் ஜூஸ், பிரட் ஆம்லெட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவைகளை ஆடர் செய்துள்ளனர்.
பேசிக்கொண்டே கடையில் இருந்த சாக்லேட் டப்பாவில் கை வைத்த ஓட்டுநர் ஜெயமாலா, கொத்து கொத்தாக சாக்லேட்டுகளை அள்ளி, சக காவலர்களுக்கு கொடுத்துள்ளார். ஆர்டர் செய்த பொருட்களுக்கும், சாக்லேட்டிற்கும் கடையில் இருந்த வெளிமாநில ஊழியர் பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயமாலா, கடையின் ஓனர் யார் ? போலீசிடமே பணம் கேட்குறியா ? என்று குரலை உயர்த்தியுள்ளார்.
நடுக்கம் அடைந்த ஊழியர் உடனே கடையின் மற்றொரு ஊழியருக்கு போன் செய்து கொடுத்துள்ளார். போனை வாங்கி பேசிய ஜெயமாலா, “ஓ நீதானா..? கடை ஓனர் யாரு? ஓனர் நம்பரை கொடு என” அடாவடியாக பேசியுள்ளார். மேலும் நைட் முழுக்க உங்களுக்காக தானே வேலை பாக்குறோம் என தங்களுடைய கடமைகளை, லிட்ஸ் போட்டு சொல்லியிருக்கிறார்.
செல்போன் பேச்சு நீண்டு கொண்டே சொல்ல சின்ன ஸ்நாக்ஸ்க்கு காசா? கடை உரிமத்தையே ரத்து செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக கடையின் உரிமையாளர் சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவலர்கள் மீது புகார் அளிக்கப்பட்டதால், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நேரடியாக விசாரணையில் இறங்கினார். இரவு பணியில் ஈடுபட்ட நான்கு காவலர்களும் ஓசியில் ஸ்நாக்ஸ் கேட்டு ரகளையில் ஈடுபட்டது விசாரணையில் உறுதியானது.
இதனையடுத்து காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் ஜெயமாலா, ரம்யா உள்ளிட்ட நான்கு காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் அமல்ராஜ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். ஓசியில் ஸ்நாக்ஸ் கேட்டு தகராறில் ஈடுபட்ட காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Police suspended, Viral Video