முகப்பு /செங்கல்பட்டு /

வள்ளலாருக்கு முப்பெரும் விழா.. செங்கல்பட்டில் கோலாகலம்..

வள்ளலாருக்கு முப்பெரும் விழா.. செங்கல்பட்டில் கோலாகலம்..

X
வள்ளலாருக்கு

வள்ளலாருக்கு முப்பெரும் விழா

Chengalpattu News : செங்கல்பட்டு அருகே ராமலிங்க அடிகளாரின் 200வது பிறந்தநாள் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டில் ராமலிங்க அடிகளாரின் 200வது பிறந்தநாள் முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

வள்ளல் பெருமான் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் 200வது பிறந்தநாள் விழா மற்றும் பசி பட்டினி, தீர்க்க ஏழை மக்களுக்காக தர்மச்சாலை அமைத்து மற்றும் நோய் நொடி தீர்க்க மருத்துவச்சாலை அமைத்து 158வது ஆண்டு துவக்கவிழா மற்றும் ஜோதி தரிசன் காட்டுவித்து 152வது ஆண்டு துவக்கவிழாவை சேர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லஷ்மி பாரதிதாசன் மற்றும் மாவட்ட அறங்காவல் குழுத்தலைவர் மதுசூதனன், ஆகியோர் பங்கேற்றனர்.

வள்ளலாருக்கு முப்பெரும் விழா

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்வின் தொடக்கத்தில் செங்கல்பட்டு ஶ்ரீகமலாம்பிகை உடனுறை சமேத ஶ்ரீகைலாசநாதர் கோயிலில் இருந்து வள்ளல் பெருமானின் திருவுருவ படத்தினை ஏந்திய தேர் பஜனை பாடல்கள் மற்றும் பெண்கள் கோலாட்ட நடனமாடிய படி வீதி உலாவாக தனியார் மண்டபம் வந்தடைந்தனர்.

First published:

Tags: Chengalpattu, Local News