செங்கல்பட்டு மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவர் தலைமையில் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கான சோதனை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி மாணவர்கள் இறங்கி ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகள் அமைத்திருக்க வேண்டும்.
பேருந்து அவசரகால வழி செயல்பாட்டில் இருக்க வேண்டும். இதே போல் இரண்டு தீயணைப்பு உபகரணங்களும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். இருக்கையில் கீழ் தளத்தில் ஓட்டைகள், வாகனங்களை ஓட்டுநர் இருக்கை தடுப்பு கம்பி அமைத்திருக்க வேண்டும் வாகனங்களில் ஆவணங்கள் நகல் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன.
அனைத்து வாகனங்களிலும் ஓட்டுநர் அமர வைத்து வாகனத்தை இயக்கி பிரேக் போடுவது, மாணவர்கள் ஏறும் போதும் இறங்கும் போதும் கை பிரேக் நல்ல முறையில் உள்ளதா என்ற சோதனையும் மேற்கொண்டனர். இந்த சோதனையில் செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து உதவி ஆய்வாளர் அபிலாஷ் கவுர் மதுராந்தகம் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வி தணிக்கை செய்தனர் ஓட்டுநர்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் அறிவுரை வழங்கினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chengalpattu, Local News