முகப்பு /செங்கல்பட்டு /

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 1008 வேள்வி.. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு..

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 1008 வேள்வி.. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு..

X
மேல்மருவத்தூர்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 1008 வேள்வி

1008 Velvi in Melmaruvathur Adiparashakti Siddhar Peedam : மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு உலக நன்மைக்காக வேள்வி வளர்க்கும் விழா நடைபெற்றது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள, ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு உலக நன்மைக்காக வேள்வி வளர்க்கும் விழா நடைபெற்றது.

இதில் சுமார் 1008 வேள்விகள் அமைக்கப்பட்டு, வேள்வியில் பல்வேறு மூலிகைகள் உள்ளிட்டவை பயன்படுத்தி மேல்மருவத்தூர் ஆதிபராசக்திக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சித்ரா பௌர்ணமி முன்னிட்டு உலக நன்மைக்காக வளர்க்கப்பட்ட வேள்வியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதிபராசக்தியின் அருளை வேண்டி வழிபட்டனர்.

விழாவில் கலந்துகொண்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

முன்னதாக வேள்வியினை பங்காரு அடிகளார் துவங்கி வைத்தார். நெய் ஊற்றி தமிழ் மந்திரங்கள் முழங்க வேள்வி வளர்க்கப்பட்டது. இவ்விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Chengalpattu, Local News