முகப்பு /செங்கல்பட்டு /

திருக்கழுக்குன்றம் வாலை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் 1008 பால்குட அபிஷேக விழா!

திருக்கழுக்குன்றம் வாலை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் 1008 பால்குட அபிஷேக விழா!

X
அலகு

அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Thirukkazhukundram Temple : திருக்கழுக்குன்றம் ஸ்ரீசக்தி வாலை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தின் 1008 பால்குட அபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Chengalpattu, India

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வாலை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் 1008 பால்குட அபிஷேக விழா நடந்தது. இதனைத்தொடர்ந்து, சங்கு தீர்த்தகுளத்தில் நடந்த பால்குட விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கார், ஆட்டோ, வேன் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும், தொங்கல் போட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும்

திருக்கழுக்குன்றம் முக்கிய வீதிகளில் வலம் வந்த பக்தர்கள் வாலை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வந்து அம்மனுக்கு பால்குட அபிஷேகம் செய்தனர். இவ்விழாவில் உள்ளூர் மட்டுமல்லாமல், வெளியூர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Chengalpattu, Local News