முகப்பு /செய்தி /வணிகம் / Google payக்கு டஃப் கொடுக்குமா Zomato UPI..! முழு விவரம்..

Google payக்கு டஃப் கொடுக்குமா Zomato UPI..! முழு விவரம்..

Zomato UPI..!

Zomato UPI..!

நீங்கள் உணவை ஆர்டர் செய்யும் போது, Google Pay, Paytm அல்லது PhonePe போன்ற மற்றொரு யுபிஐ பயன்பாட்டிற்கு நீங்கள் செல்லத் தேவையில்லை. நீங்கள் புதிதாக ஆரம்பிக்கும் Zomato UPI மூலம் உங்களது உணவுக் கட்டணங்களை நேரடியாக செலுத்த முடியும். இதோடு மற்ற யுபிஐ மூலமும் நீங்கள் பணம் செலுத்திக் கொள்ள முடியும்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு உள்ள தொழில்நுட்பம் ஒவ்வொன்றும் மக்களுக்கு பல வழிகளில் உதவியாக உள்ளது. குறிப்பாக கடைகளுக்குச் செல்லும் போது கையில் குறைந்த பணம் கொண்டு சென்றாலும் கவலையில்லை..கையில் மொபைல் இருந்தால் போதும் யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் அதாவது UPI யைப் பயன்படுத்தி நாம் ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்திக்கொள்ள முடியும். இதோடு மட்டுமின்றி வீட்டில் அமர்ந்தப்படியே உணவுகள் மற்றும் மளிகைப்பொருள்கள் உள்ளிட்ட வீட்டிற்குத் தேவையான பொருள்களை ஆர்டர் செய்வதற்கும் ஆன்லைன் சேவையைத் தான் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் முக்கியமான ஒன்று தான் உணவு மற்றும் மளிகைப் பொருள்களை ஆர்டர் செய்யும் Zomato நிறுவனம்.

இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் ஜொமேட்டாவில் உணவு செய்யும் போது, Google Pay, Paytm அல்லது PhonePe மூலம் தான் இதுவரை வாங்கிய பொருள்களுக்கான பணத்தை செலுத்திவந்தனர். இதனால் பல நேரங்களில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக, Zomato நிறுவனம் சொந்தமாக ஒரு புதிய UPI வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதோடு, இதற்கு Zomato UPI என்றும் பெயர் வைத்துள்ளனர்.

Read More : வங்கியில் உணவு இடைவேளை என உங்களை காக்க வைக்கிறாங்களா?... SBI மட்டும் அல்ல எல்லா வங்கிக்கும் இதுதான் ரூல்ஸ்!

இதுக்குறித்து கருத்துத் தெரிவித்துள்ள யுபிஐ நிறுவனம், நீங்கள் புதிய Zomato UPI யைப் பயன்படுத்த தொடங்கினால், மூன்றாம் தரப்பு கட்டண விண்ணப்பங்களை நம்பியிருப்பதைக் குறைக்க உதவுகிறது என்கின்றனர். மேலும் கேஷ் ஆன் டெலிவரி (Cash on delivery- COD) ஆர்டர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகம் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீங்கள் இந்த Zomato UPI கணக்கை உருவாக்க, KYC செய்யும்படி உங்களிடம் கேட்கப்படாது எனவும் ஜொமோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

top videos

    Zomato UPI ஐ உருவாக்குவது எப்படி?

    தற்போதைய நிலவரப்படி, Zomato UPI சேவை அதன் பைலட் திட்டத்தில் உள்ளதோடு, சில தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இருந்தப்போதும் அடுத்த சில மாதங்களில் இந்தச் சேவை அனைத்து Zomato பயனர்களுக்கும் கிடைக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
    தற்போது ஐசிஐசிஐ வங்கியுடன் மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் பல வங்கிகளுடன் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    வாடிக்கையாளர்கள், Zomato UPI யை துவங்க வேண்டும் என்றால், உங்களது Zomato கணக்கின் சுயவிவரப் பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும்.
    பின்னர் Zomato UPI விருப்பத்தைப் பார்க்கும் வரை கீழே ஸ்க்ரோல் செய்யவும். Activate UPI யை என்பதைக் கிளிக் செய்து, உங்களுக்குத் தேவையான ஜோமாட்டோ யுபிஐ ஐடியை (zomato UPI ID) அமைக்க வேண்டும்.
    இதையடுத்து உங்களது மொபைல் எண்ணைக் கிளிக் செய்து, உங்கள் வங்கிக் கணக்கை இணைத்து Zomato செயலி மூலம் சிரமமின்றி பணம் செலுத்திக்கொள்ளலாம் என்கிறது Zomato நிறுவனம்..
    First published:

    Tags: Technology, UPI, Zomato