முகப்பு /செய்தி /வணிகம் / சொமேட்டோ புதிய UPI வசதி தொடக்கம்... இனி இப்படி பணம் செலுத்தலாம்!

சொமேட்டோ புதிய UPI வசதி தொடக்கம்... இனி இப்படி பணம் செலுத்தலாம்!

ஸ்மோடோ

ஸ்மோடோ

Zomato UPI: பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து யுபிஐ வசதியை அறிமுகம் செய்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ ”Zomato UPI” என்ற புதிய வசதியை ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது.

UPI (Unified Payments Interface) மூலம் டிஜிட்டல் முறையில் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். நாடு முழுவதும் யுபிஐ மூலம் உங்களில் மொபைல் எண் கொண்டு வங்கிக் கணக்குகளை இணைப்பதன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம். இந்த வசதியைக் கூகுள் பே, போன் பே, வாட்ஸ் அப் பே மற்றும் பே டிஎம் போன்ற நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர். மேலும் வங்கிகள் அவர்களுக்கு என்று தனித்துவ யுபிஐ வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்து ஆன்லைனில் கட்டணம் செலுத்தக் கூகுள் பே, போன் பே, வாட்ஸ் அப் பே மற்றும் பே டிஎம் போன்ற யுபிஐ சேவையைக் கொண்டு தான் செய்ய முடியும். இந்த நிலையை மாற்றியமைக்கும் வகையில், சொமேட்டோ புதிய யுபிஐ வசதியை அறிமுகம் செய்துள்ளனர்.

Zomato UPI -இல் உங்களின் மொபைல் எண் கொண்டு வங்கிக் கணக்கை இணைத்துக்கொள்ளலாம். உணவு ஆர்டர் செய்துவிட்டு ஆப்பை விட்டு வெளியில் செல்லாமல், Zomato UPI பே மூலமாகவே பில்லை ஆன்லைனில் செலுத்திவிடலாம்.

Also Read : FD கணக்கிற்கு 8.75 சதவீதம் வரை வட்டி தரும் 5 முக்கிய வங்கிகள்...

இதன் மூலம் ஆர்டர் செய்துவிட்டு விரைந்து பேமண்ட்டையும் செய்துவிடலாம். மேலும், cash on delivery (COD) என்ற உபயோகத்தையும் குறைக்க உதவும். டிஜிட்டல் முறை பணப்பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையாக அமையும்.

top videos

    தகவலின் படி, சுமார் 97 சதவீதம் டிஜிட்டல் யுபிஐ வாடிக்கையாளர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் பே டிஎம் ஆகியவற்றை அதிக உபயோகிக்கின்றனர். தற்போது முதன்மையான தனியார் வங்கியான ஐசிஐசிஐ-யுடன் இணைத்து யுபிஐ வசதியை வழங்குவதால், வாடிக்கையாளர்களின் அனுபவத்தை இன்னும் அதிகரிக்கலாம் என்று சொமேட்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: UPI, Zomato