பான்-ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு இன்னும் 4 நாட்களில் முடிய உள்ளது. மார்ச் 31, அதற்குள் இந்த இரண்டு முக்கிய ஆவணங்களும் இணைக்கப்படாவிட்டால், உங்கள் நிரந்தர கணக்கு எண் அல்லது பான் ஏப்ரல் 1 முதல் செயலிழந்துவிடும். அதுமட்டும் இல்லாமல் அரசாங்கத்திற்கு கூடுதல் வரியை நீங்கள் செலுத்த வேண்டும்.
ஆச்சரிய பட வேண்டாம். இது உண்மை தான். மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின்( CBDT) மார்ச் 30, 2022 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, "PAN செயல்படாத நிலையில் வைத்திருப்பவர்கள் அரசுக்கு அதிக விகிதத்தில் வரி கட்ட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது. நீண்ட நாட்களாக பான்- ஆதார் இணைப்புக்கு காலக்கெடு கொடுத்து வரும் நிலையில் ஏப்ரல் 1 முதல் இது கண்டிப்பாக செயல்படுத்தப்படும்.
இதை விளக்கி, IP Pasricha & Co இன் பங்குதாரர் மணீத் பால் சிங், News18.com இடம் கூறியதாவது , “மார்ச் 31, 2022க்குள் உங்கள் பான் (நிரந்தர கணக்கு எண்) ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், உங்கள் பான் செயலிழந்துவிடும். இதன் விளைவாக, உங்களுக்கான மூலத்தில் (டிடிஎஸ்) கழிக்கப்படும் வரியானது சாதாரண டிடிஎஸ் விகிதத்திற்குப் பதிலாக 20 சதவீதம் அல்லது பொருந்தக்கூடிய விகிதத்தில் எது அதிகமாக இருக்கிறதோ, அந்த தொகை கழிக்கப்படும் " என்றார்.
வங்கி வைப்பு வட்டி, ஆலோசனைக் கட்டணம், கமிஷன்கள், கிரிப்டோகரன்சி அல்லது மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் முத்திரை பத்திரம் உள்ளிட்டவற்றின் மூலத்தில் உள்ள வருமானத்தில் இருந்து கழிக்கப்படும் வரி, 'டிடிஎஸ் மூலங்கள்' ஆகும் ஆகும். இதுபோன்ற பல்வேறு வருமானங்கள் மற்றும் முதலீடுகளில் சாதாரண TDS விகிதம் 1 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது.
உதாரணத்துடன் விளக்கிய சிங், உங்கள் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம் என்றும் உங்கள் சாதாரண டிடிஎஸ் விகிதம் 10 சதவீதம் என்றும் வைத்துக்கொள்வோம். மார்ச் 31, 2023க்குள் உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை எனில், உங்கள் பான் செயலிழந்துவிடும். அதன் பின்னர் உங்கள் வருமானத்திற்கு 20 சதவீதம் என்கிற அதிக டிடிஎஸ் விகிதம் பொருந்தும். எலின் 1 லட்சத்திற்கு பதிலாக 2 லட்சத்தை வரியாக கட்டவேண்டும்.
விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் மீதான சாதாரண டிடிஎஸ் விகிதம் சாதாரணமாக, 1 சதவீதம். இருப்பினும், மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், இந்த வரியும் 20 சதவீத டிடிஎஸ் ஆக மாற்றப்படும். நினைத்துப்பாருங்கள் 1% க்கும் 20% வரிக்கும் உள்ள வித்தியாசத்தை. இதற்கு பதிலாக 5 நிமிடம் செலவழித்து பான்-ஆதாரை இணைத்துவிடலாம்.
மேலும், CBDT சுற்றறிக்கையின்படி, ஒரு நபரின் PAN செயலிழந்துவிட்டால், "அவர் அந்த நிரந்தர கணக்கு எண்ணை அரசுக்கு தெரிவிக்கவில்லை அல்லது மேற்கோள் காட்டவில்லை, வரி செலுத்துவதற்கு உட்படுத்தப்படவில்லை என்று கருதப்படும்". இதனால் தான் உச்ச வரம்பு வரி விகிதங்கள் விதிக்கப்படுகின்றன.
அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமான KYC அளவுகோல்களில் ஒன்று பான் என்பதால், பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால், வங்கிகள் மற்றும் பிற நிதி இணையதளங்கள் போன்ற பல்வேறு தளங்களில் வரி செலுத்துவோர் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்றும் CBDT கூறியது.
இதையும் படிங்க: பான் கார்டு செயலிழக்கும்.. நெருங்கிய காலக்கெடு.. உடனே ஆதாருடன் லிங்க் பண்ணுங்க!
இது தவிர, மார்ச் 31க்குள் ஆதாருடன் பான் இணைக்கப்படாவிட்டால் பின்வரும் சேவைகளும் நிறுத்தப்படும்:
1) செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி நீங்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது
2) நிலுவையில் உள்ள வரி அறிக்கைகள் செயலாக்கப்படாது
3) செயல்படாத PAN களுக்கு நிலுவையில் உள்ள வரி தொகையை திரும்பப் பெற முடியாது
4) பான் செயலிழந்தவுடன், குறைபாடுள்ள நிதி பரிவர்த்தனை போன்ற நிலுவையில் உள்ள நிதி சார்ந்த நடவடிக்கைகளை முடிக்க முடியாது.
5) நிதி சார்ந்த புகார் அளிக்க முடியாது. பரிவர்த்தனைகளை சார்ந்த சேவை உதவிகளை பெற முடியாது
6) PAN செயலிழந்ததால் அதிக விகிதத்தில் வரி கட்ட வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhaar card, Pan card