முகப்பு /செய்தி /வணிகம் / ஆதார் போதும்... 5 நிமிடத்தில் 2 லட்சம் வரை கடன் கிடைக்கும்... எப்படி தெரியுமா?

ஆதார் போதும்... 5 நிமிடத்தில் 2 லட்சம் வரை கடன் கிடைக்கும்... எப்படி தெரியுமா?

ஆதார் அட்டை மூலம் வெறும் 5 நிமிடத்தில் 2 லட்சம் வரை கடன் பெறலாம்!

ஆதார் அட்டை மூலம் வெறும் 5 நிமிடத்தில் 2 லட்சம் வரை கடன் பெறலாம்!

நீங்கள் தனிநபர் கடன் பெற விரும்பினால் ஆதார் அட்டை மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து எளிதாகவே பெறலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பெரும்பாலும் நாம் தனிநபர் கடனைப் பெற முகவரி, சொத்து மதிப்பு மற்றும் அடையாளச் சான்று என பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது வரும். ஆனால், தற்போது வெறும் ஆதார் அட்டையை மட்டும் வைத்து, வீட்டில் இருந்தபடியே 2 லட்சம் வரையிலான தனிநபர் கடனை பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?.

உண்மை தான்… இப்போது பெரும்பாலான வங்கிகள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி e-KYC செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன் செயல்முறை மிகவும் எளிமையானது. ஆன்லைனில், நீங்கள் தனிநபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

ஆதார் மூல கடன் வழங்கும் வங்கிகள் : உங்கள் ஆதார் அட்டையின் உதவியுடன் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிது. பாரத ஸ்டேட் வங்கி, HDFC வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி போன்ற இந்தியாவில் உள்ள பல வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வெறும் ஆதார் அட்டையை மட்டும் வைத்து கடன் பெறலாம். இதனுடன், உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் சரிபார்க்க வேண்டும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். ஆதார் அட்டை மூலம் 2 லட்சம் வரை கடன் பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உங்கள் விண்ணப்பத்திற்கான ஒப்புதல் 5 நிமிடங்களுக்குள் கிடைக்கும். உங்களுக்கான தொகை உடனடியாக விநியோகிக்கப்படும்.

ஆதார் அட்டை மூலம் தனிநபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது :

உங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி கடனுக்கு விண்ணப்பிக்க உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

வங்கியின் மொபைல் செயலியைப் பயன்படுத்தி தனிநபர் கடனுக்கும் விண்ணப்பிக்கலாம்.

ALSO READ | UPI ல் இனி EMI வசதி.. ஐசிஐசிஐ வங்கியின் சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம்!

இதற்குப் பிறகு உங்களுக்கு OTP வரும். நீங்கள் அதை உள்ளிட வேண்டும்.

பின்னர், நீங்கள் தனிநபர் கடன் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

நீங்கள் கடன் தொகை மற்றும் பிற தேவையான தகவல்களை உள்ளிட வேண்டும்.

top videos

    அதன் பிறகு, உங்களிடம் பான் கார்டு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், அனைத்து தகவல்களும் வங்கியால் சரிபார்க்கப்படும். இதைச் செய்த பிறகு, உங்கள் கடன் அங்கீகரிக்கப்பட்டால், உங்கள் கடன் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

    First published:

    Tags: Aadhaar card, HDFC, HDFC Bank, SBI, SBI Loan