முகப்பு /செய்தி /வணிகம் / வட்டி ரொம்பவே அதிகம்... பெண் குழந்தைகளுக்கு சூப்பரான சிறு சேமிப்பு திட்டம்...!

வட்டி ரொம்பவே அதிகம்... பெண் குழந்தைகளுக்கு சூப்பரான சிறு சேமிப்பு திட்டம்...!

மாதிரிப்படம்..

மாதிரிப்படம்..

குறைந்தபட்சம் 250 ரூபாயில் தொடங்கி, அதிகபட்சம் 1.5 லட்சம் வரை ஒரு வருடத்தில் முதலீடு செய்யலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சேமிப்பு இருக்கணும், வரிச் சலுகையும் இருக்கணும் என்று நினைப்பவர்கள், உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால், இந்த திட்டம் குறித்து நீங்கள் யோசிக்கலாம்.

பெண் குழந்தைகளுக்கு இருக்கக் கூடிய சேமிப்பு வாய்ப்புகளில் முக்கியமானது சுகன்யா சம்ரிதி திட்டம். இதில், ஒருவர் அவரின் 10 வயதுக்கு உட்பட்ட, இரு பெண் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தில் முதலீட்டை ஆரம்பிக்க முடியும். குறைந்தபட்சம் 250 ரூபாயில் தொடங்கி, அதிகபட்சம் 1.5 லட்சம் வரை ஒரு வருடத்தில் முதலீடு செய்யலாம். இந்தக் கணக்கு தொடங்கி 15 வருடம் வரை இவ்வாறு நாம் பணம் சேர்த்து வரலாம்.

இதையும் வாசிக்க: வீடு கட்ட லோன் வாங்க போறீங்களா? வங்கி கடன் வாங்கும் முன் இதையெல்லாம் கவனிங்க!

top videos

    இந்த முதலீட்டிற்கு 80சி பிரிவின்கீழ் வரிச் சலுகை பெற முடியும். இதில் செய்யப்படும் முதலீடு அதிகபட்சம் 21 ஆண்டுகள் லாக்இன் காலம் இருக்கிறது. அந்த கணக்கில் வரவு, செலவுகளை மேற்கொள்ளலாம். இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது வட்டி எவ்வளவு கொடுத்தார்கள் தெரியுமா? 9.1%. தற்போது 8%. இதில் கொடுக்கப்படும் வட்டி நிலையான வட்டி இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

    First published:

    Tags: Investment, Savings