ஸ்டேஷனுக்கு வெளியே ரயில்கள் சில பல நிமிடங்கள் வரையிலும் காத்திருப்பது ஏன் என்று நீங்கள் இதுவரை யோசித்தது உண்டா?பொதுவாக ஓரிரு நிமிடங்கள் காத்திருப்பது இயல்பானது தான் என்றாலும் கூட, சில சமயங்களில் அரை மணி நேரம் முதல் ஒரு சில மணி நேரங்கள் வரையிலும் காத்திருக்க வேண்டி இருக்கும். பச்சை சிக்னல் கிடைக்காமல் ரயில்களை இயக்கும் அதிகாரம் லோகோ பைலட்டுக்கு கிடையாது.
ஸ்டேஷனில் இந்த ரயில் சென்று நிற்க வேண்டிய இடத்தில் மற்றொரு ரயில் நின்று கொண்டிருப்பதாலேயே இந்த ரயில் காத்திருக்கும். ஒரே ஸ்டேஷனுக்கு வெவ்வேறு ரயில்கள் ஒரே நேரத்தில் வந்து சேர்வதாலயே இதுபோன்று டிராஃபிக் நெருக்கடி ஏற்படும். ஸ்டேஷனில் ஏற்கனவே இருக்கும் ரயில் வெளியேறாமல் மற்றொரு ரயில் உள்ளே நுழைய முடியாது. உதாரணத்திற்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டும் ஒரே சமயத்தில் 4-ஆம் எண் நடைமேடைக்கு வருகின்றன என்றால், ஒரு ரயில் வந்து வெளியேறும் வரையில் மற்றொரு ரயில் காத்திருக்க வேண்டியிருக்கும்.
ரயில் நிலையத்திற்குள் முதலில் எந்த ரயில் வர வேண்டும் என்பதை நிலைய மேலாளர் தான் முடிவு செய்வார். ஒட்டுமொத்த ரயில் நிலையமும் அவரது கட்டுப்பாட்டில் தான் இருக்கும். அவர் ஒப்புதல் கொடுக்கும் வரையில் லோகோ பைலட் ரயிலை இயக்க முடியாது. ரயில் இயக்க அட்டவணையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ரயில்கள் ஒரே நடைமேடைக்கு வருவதால் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் விபத்துக்கள் போன்ற தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் இத்தகைய திட்டமிடுதலை நிலைய மேலாளர் மேற்கொள்கிறார். காத்திருக்க வேண்டிய ரயிலுக்கு சிவப்பு சிக்னலும், புறப்பட வேண்டிய ரயிலுக்கு பச்சை சிக்கனலும் வழங்கப்படும். லோகோ பைலட்டுகள் இதை கவனிக்காமல் சென்றால் விபத்து ஏற்படக் கூடும்.
எந்தெந்த ரயிலுக்கு முன்னுரிமை.!
ஒரு ரயில் நிலையத்தின் ஒரே நடைமேடையில் ஒன்றுக்கு மேற்பட்ட ரயில்கள் ஒரே சமயத்தில் வந்தால் எதன் அடிப்படையில் எந்த ரயில் முதலில் அனுமதிக்கப்படுகிறது என்ற விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதிவிரைவு ரயில்கள் மற்றும் சிறப்பு விரைவு ரயில்களுக்கு மற்ற ரயில்களை காட்டிலும் முன்னுரிமை அளிக்கப்படும். உதாரணத்திற்கு ராஜ்தானி மற்றும் சதாப்தி ஆகிய இரண்டு ரயில்களும் ஒரே சமயத்தில் வருகின்ற பட்சத்தில் ராஜ்தானி அதிவிரைவு ரயிலுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Moving train, Train