முகப்பு /செய்தி /வணிகம் / பிளாட் வாங்குவதற்கும் வீடு வாங்குவதற்கும் என்ன வித்தியாசம்.? பணத்தை சேமிக்க எது சிறந்தது?

பிளாட் வாங்குவதற்கும் வீடு வாங்குவதற்கும் என்ன வித்தியாசம்.? பணத்தை சேமிக்க எது சிறந்தது?

தனி வீடு Vs பிளாட்

தனி வீடு Vs பிளாட்

Flat vs Independent House : சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு தனி வீடு வாங்குவது நல்லதா?.. பிளாட் வாங்குவது சிறந்ததா? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் அனைவருக்கு சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், தற்போது பெரும்பாலான நகரங்களில் பிளாட் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, பூனே போன்ற பெரும் நகரங்களில் பெரும்பாலும் பிளாட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் தனி வீடு வாங்குவதை விட பிளாட் வாங்குவதையே அதிகம் விரும்புகின்றனர்.

ஒரு பிளாட் அல்லது ஒரு தனி வீட்டை வாங்குவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் வசதியைப் பொறுத்தது. குறிப்பாக தனி வீடு என்பது சென்னை போன்ற மாநகரங்களின் முக்கிய ஏரியாக்களில்

இருப்பினும், நீங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்கப் போகிறீர்கள் என்றால், இரண்டின் நன்மை மற்றும் தீமைகளை அறிந்து கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு தனி வீடு வாங்குவது நல்லதா?.. பிளாட் வாங்குவது சிறந்ததா? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். அதற்கு முன் இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்வோம்.

ஒரே கட்டிடத்தில் ஒரே மாதிரியான பல வீடுகள் கட்டப்படுவதை தான் அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது பிளாட் என கூறுகிறோம். அவற்றின் அடிப்படை கட்டமைப்பை பில்டர் மட்டுமே தீர்மானிக்கிறார். நீங்கள் வீட்டிற்குள் சிறிய மாற்றங்களைச் செய்யலாம். ஆனால், உங்கள் வீட்டை முழுவதுமாக உடைத்து மீண்டும் கட்ட முடியாது. ஒரு தனி வீடு அல்லது வில்லாவை விட பிளாட்கள் மலிவான விலையில் கிடைக்கும். மறுபுறம், ஒரு தனி வீட்டில் அதிக சுதந்திரம் உள்ளது. உங்கள் சொந்த வீட்டில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாரும், எதுவும் கேக்க முடியாது. வீட்டின் கூரை முதல் வீடு கட்டப்பட்டுள்ள நிலம் வரை உங்களுக்கு முழு உரிமை உண்டு.

எது சிறந்தது?

வீட்டுக்கும் பிளாட்டுக்கு உள்ள வித்தியாசபடுத்த வெறும் 4 புள்ளிகள் மட்டுமே உள்ளது.

முதல் விஷயம், விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளைப் பார்த்தால் தனி வீடுகளை விட மலிவானது. உங்களுக்கு பிளாட் வாங்கும் போதே பல நவீன வசதிகள் கொடுக்கப்படும். ஆனால், உங்கள் வீட்டில் இந்த வசதிகளை அமைக்க அதிகமாக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

Also Read | தினமும் ரூ.252 முதலீடு போதும்... ஓய்வு காலத்தில் ரூ.54 லட்சம்... அள்ளி கொடுக்கும் சேமிப்பு திட்டம்...!

இரண்டாவது, ஒரு பிளாட் வாங்குவதற்கு 90 சதவீதம் வரை நிதி பெறலாம். ஆனால், தனி வீட்டை பொறுத்தவரை இது 70 சதவீதம் மட்டுமே.

மூன்றாவது விஷயம் என்னவென்றால், லிப்ட், தண்ணீர், மின்சாரம் போன்ற பிளாட் பராமரிப்புக்கு அந்த கட்டிடத்தில் இருக்கும் அனைவருமே பொறுப்பு. ஆனால், வீட்டில் இதெல்லாம் உங்கள் பொறுப்பு. இதனால் செலவு மேலும் அதிகரிக்கிறது.

நான்காவது மற்றும் மிக முக்கியமான விஷயம் மறுவிற்பனை மதிப்பு. உங்கள் பிளாட் எளிதில் விற்கப்படலாம் ஆனால் வீட்டை விற்பதில் சிக்கல்கள் இருக்கலாம்.

பாதுகாப்பு மற்றும் பிற விஷயங்கள்: 

top videos

    வீடு ஹவுசிங் சொசைட்டியில் இருந்தால், ஒரு சங்கமாகவே அது செயல்படுகிறது. இது தவிர, காப்பீடு, கொள்முதல் விலை போன்றவற்றில் பிளாட் முதலிடம் வகிக்கிறது. இருப்பினும், நீங்கள் உங்கள் சொந்த வழியில் வீட்டை கட்ட விரும்பினால், ஒரு பிளாட்டுக்கு பதிலாக, ஒரு சுதந்திரமான வீடு உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

    First published:

    Tags: Property