முகப்பு /செய்தி /வணிகம் / Video | 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றப் போறீங்களா? இதெல்லாம் கவனிங்க...!

Video | 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றப் போறீங்களா? இதெல்லாம் கவனிங்க...!

காட்சி படம்

காட்சி படம்

Rs 2,000 notes withdrawn | வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் போது பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்களை இந்த பகுதியில் அறிந்துக்கொள்ளலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடைமுறை எப்படி இருக்கிறது என்று சில வங்கிகளில் சென்று பார்த்தோம்.. அதில் சாமானிய மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அவைகள்.

1. முதலில், 10, 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வேண்டும் என்றாலும் வங்கிகள் ஆதார், பான் போன்ற ஆவணங்களை கேட்கின்றன.

2. உதாரணத்திற்கு நீங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கியில் 20 ஆயிரத்தை மாற்ற சென்றால், உங்கள் வங்கி கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டும்.

3. உங்களுக்கு வங்கி கணக்கு இல்லாத ஒரு வங்கியில் பணத்தை மாற்ற சென்றால், கண்டிப்பாக ஆதார், பான் போன்ற ஆவணங்களை கேட்கிறார்கள்.

4. இரண்டாவது வங்கியின் ஏடிஎம் மையங்களில் பணத்தை டெபாசிட் செய்யும் வசதி இருக்கும். ஆனால், இந்த 2000 ரூபாய் நோட்டைக்களை மாற்றுவதற்கு என்று தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

5. சில வங்கிகள் ஏடிஎம் மூலம் 2 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யும் வசதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரியவில்லை.

' isDesktop="true" id="989474" youtubeid="NQSOiFJtUxY" category="business">

6. மூன்றாவது பொதுவாக வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யும் போது, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால், கூடுதலாக டெபாசிட் செய்யப்படும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

7. அதே நடைமுறை தான் 2 ஆயிரம் ரூபாய் டெபாசிட்டிலும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த 2 லட்சம் டெபாசிட் லிமிட் என்பது ஒவ்வொருவரின் வங்கி கணக்கை பொறுத்து மாறும்.

First published:

Tags: RBI, Reserve Bank of India, Shakthikantha Das