சம்பள ஊழியர்களுக்கு நிறுவனம் HRA தொகை என்று ஒன்றை வழங்குவர். உங்கள் payslip-ல் வழங்கப்படும் HRA தொகை குறிப்பிடப்பட்டு இருக்கும். அப்படி என்றால் என்ன ? அதற்குத் தகுதியானவர்கள் யார் என்பதைப் பற்றியும் HRA வரி விலக்கு உண்டா என்பதைப் பற்றி பார்க்கலாம்.
வாடகை வீட்டில் வசிக்கும் ஊழியர்களுக்கு நிறுவனம் அளிக்கும் சிறு தொகையே வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) ஆகும். இதற்குப் பாதியாகவோ அல்லது முழுமையாகவோ வரி விலக்கு அளிக்கப்படுகிறது. சொந்த வீட்டில் வசிக்கும் ஊழியர்களுக்கு இதற்கு வரி விலக்கு அளிக்கப்படுவது இல்லை. வீட்டு வாடகை கொடுப்பனவாக (HRA) பெறும் மொத்தத் தொகை அல்லது ஒரு வருடத்தில் நீங்கள் செலுத்தும் மொத்த வாடகையை வருமான வரிச் சட்டத்தின் கீழ் முழுமையாக வரி விலக்கு பெற முடியாது.
HRA காரணிகள்:
வருமான வரி விதிகளின் கீழ் 3 பிரிவுகளில் வரி விலக்கு வழங்கப்படுகிறது.
1.மொத்தம் HRA தொகை
2. சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் தொகை வீட்டு வாடகையாகச் செலுத்துதல்.
3. கொல்கத்தா, சென்னை, மும்பை மற்றும் டெல்லி ஆகிய 4 நகரங்களில் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் வரையில் HRA பிரிவில் வரி விலக்கு பெற முடியும் அல்லது இந்த 4 நகரங்கள் தவிர மற்ற நகரங்களில் வாடகை வீட்டில் இருந்தால் அடிப்படை சம்பளத்தில் 40 சதவீதம் HRA பிரிவில் வரி விலக்கு பெறமுடியும்.
HRA கணக்கிடுவது எப்படி?
மேல் குறிப்பிட்ட மூன்று காரணிகள் மூலம் HRA கணக்கிடப்படுகிறது.
உதாரணத்திற்கு மெட்ரோ நகரமான சென்னையில் ஊழியர் ஒருவர் வசிக்கிறார். அவருக்கு மாதம் சம்பளம் ரூ.60,000 என்று வைத்துக்கொள்வோம். நிறுவனத்தில் இருந்து வழங்கப்படும் மாத வீட்டு வாடகை கொடுப்பனவு ரூ.20 ஆயிரம். அவரின் வீட்டு வாடகை ரூ.15 ஆயிரம்.
Also Read : Gold Rate Today | அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம்...!
அவரின் வீட்டு வாடகை கொடுப்பனவு ஆண்டிற்கு ரூ.2,40,000. இது முதல் விதி கீழ் மொத்த தொகை. இரண்டாவதாக வீட்டு வாடகை செலுத்தும் தொகையில் இருந்து 10 சதவீதம் மட்டும் அடிப்படை ஊதியத்தில் இருந்து கழித்து மீதும் தொகை ரூ.1,20,000 ஆகும். மூன்றாவதாக முக்கிய நகரத்தில் வசிப்பதால் ஆண்டு அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ரூ.3,60,000 ஆகும்.
இதில் குறைந்தபட்ச தொகையான ரூ.1,20,000 மட்டும் வரி விலக்கு அளிக்கப்படும். இதர தொகைக்கும் வரி செலுத்த வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Income tax, Salary