முகப்பு /செய்தி /வணிகம் / ஆதார் கார்டிலுள்ள உங்கள் பழைய புகைப்படத்தை மாற்றுவது எப்படி...? எளிய டிப்ஸ் இதோ..!

ஆதார் கார்டிலுள்ள உங்கள் பழைய புகைப்படத்தை மாற்றுவது எப்படி...? எளிய டிப்ஸ் இதோ..!

ஆதார் அட்டை

ஆதார் அட்டை

Aadhaar card replace Tips | பத்து ஆண்டுகளுக்கு மேல் எடுக்கப்பட்ட ஆதார் கார்டை இப்போது அப்டேட் செய்ய வேண்டியது அவசியம். போட்டோவை கண்டிப்பாக மாற்ற வேண்டும். அது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

  • Last Updated :
  • Delhi, India

நம் இந்திய குடிமக்களின் அவசியமான ஆதார ஆவணமாக மாறியுள்ளது ஆதார் அட்டை. சாதாரணமாக ரயிலில் பயணம் செய்வது தொடங்கி, வருமான வரி, வங்கி பரிவர்த்தனை, அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவது என அனைத்திற்கும் ஆதார் அவசியமாகிறது. ஆனால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளில் இருக்கும் நம் புகைப்படத்தை பார்த்தால் நமக்கே அடையாளம் தெரியாது. எனவே இப்போது இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை ஆதார் அட்டையில் இணைக்க வேண்டியது அவசியமாகிறது. அது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

1. முதலில் UIDAI (https://uidai.gov.in/) அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

2. அடுத்து அந்த இணையதளப் பக்கத்தில் Aadhaar Update எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

3. அதன்பின்பு ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை நிரப்பவும்.

4. அடுத்து அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையத்தில் அந்த படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

5. அங்கு இருக்கும் ஆதார் ஊழியர் அனைத்து விவரங்களையும் பயோமெட்ரிக் மூலம் சரிபார்ப்பார். அதன்பிறகு உங்களது ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்படும் புதிய புகைப்படத்தை பணியாளர் எடுத்துக்கொள்வார்.

6. அதன் பிறகு ஆதார் ஊழியர் உங்களுக்கு ஒப்புகை சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (URN - Update Request Number) வழங்குவார். பின்பு உங்கள் புகைப்படம் 90 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும்.

7.  ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கான உங்கள் விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை ஆன்லைனில் கண்காணிக்கலாம். அதாவது UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் URN எண்ணைப் பயன்படுத்தி புதிய ஆதார் அட்டையின் நிலையைக் கண்காணிக்கலாம்.

8. இதே போல் உங்கள் முகவரி மாறியிருந்தாலும் அதை நீங்களே அப்டேட் செய்து கொள்ளலாம்.

9. முதலில் UIDAI (https://uidai.gov.in/)  இணையதளத்தை திறந்து கொள்ளுங்கள். லாக் இன் செய்த உடன் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி மாற்றத்திற்கான ஆப்சனை தேர்வு செய்து கொள்ளவும்.

10. அதனை தொடர்ந்து ஆதார் அப்டேட் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். தொடர்ந்து ஆன்லைன் படிவத்தில் முகவரி மாற்றத்திற்கான விருப்பத்தை தேர்வு செய்து உங்கள் புதிய முகவரியை பதிவு செய்து Proceed to Update Aadhar என்பதை கிளிக் செய்யவும்.

11. இதற்காக கேட்கப்படும் ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

12. அதனை தொடர்ந்து 50 ரூபாய் பணம் செலுத்துவதற்கான ஆப்ஷன் வரும்.

13. அந்த ஆப்ஷனில் பணம் செலுத்தப்பட்ட உடன் SRN எனப்படும் Service Request Number கொடுக்கப்படும்.

14. உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு உறுதி செய்யப்பட்ட குறுஞ்செய்தி உங்களுக்கு அனுப்பப்படும்.

top videos

    15. இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி பத்து ஆண்டுகளுக்கு மேலான உங்கள் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

    First published:

    Tags: Aadhaar card, Aadhar