தென் கொரியாவை சேர்ந்த 20 டிஸ்ப்ளே கிளாஸ் நிறுவனங்களுடன் இந்தியாவை சேர்ந்த வேதாந்தா குரூப் கூட்டு சேர்ந்துள்ளது. வேதாந்தா நிறுவனமானது குஜராத்தில் தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்கானுடன் சேர்ந்து கூட்டு முயற்சியில் செமிகண்டக்டர் ஆலையை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இது தவிர டிஸ்ப்ளே யூனிட் அமைக்க வேதாந்தா நிறுவனமும் விண்ணப்பித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையத்தை உருவாக்க மற்றும் மேம்படுத்த தென் கொரிய நிறுவனங்களுடன் பார்ட்னர்ஷிப் சேர்ந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தை சேர்ந்த ஒரு உயரதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார். இதன் ஒரு பகுதியாக டிஸ்ப்ளே கிளாஸ் துறையில் இருக்கும் 20 கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் வேதாந்தா குரூப் சமீபத்தில் அறிவித்து உள்ளது. தென் கொரிய அரசாங்கத்தின் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட Korea Biz-Trade Show 2023 நிகழ்வில் இந்த நிறுவனங்களுடன் அனில் அகர்வால் தலைமையிலான குழு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது.
வேதாந்தா நிறுவனத்தின் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே பிசினஸின் க்ளோபல் மேனேஜிங் டைரக்டரான ஆகர்ஷ் ஹெப்பர் கூறுகையில், "சுமார் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்களுடன் கூட்டு சேர்வதில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் எலெக்ட்ரானிக்ஸ் மேனஃபாக்ஸரிங் வேல்யூ செயினில் ஈடுபட்டுள்ள 20 கொரிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திட்டுள்ளோம் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என கூறி இருக்கிறார். தொடர்ந்து பேசி இருக்கும் ஹெப்பர் மேலும் பல நிறுவனங்களை Electronics hub அமைக்கும் முயற்சிக்கு பார்ட்னராக வருமாறு அழைப்பு விடுத்தார்.
Read More : ஆதார் போதும்... 5 நிமிடத்தில் 2 லட்சம் வரை கடன் கிடைக்கும்... எப்படி தெரியுமா?
இந்த Hub-ஆனது 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஈர்க்கும் திறன் கொண்டது என்றும் எதிர்காலத்தில் 100,000-த்திற்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் கூறினார். அரசின் சாதகமான கொள்கைகளால் இந்தியாவை மின்னணு மையமாக மாற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்மொழியப்பட்ட Electronics hub-ல் வேதாந்தாவின் Display Manufacturing Facility குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்கும் என்று அவர் கூறினார். முன்னதாக கடந்த டிசம்பரில் ஜப்பானில் நடந்த ரோட்ஷோ-வின் போது சுமார் 30 ஜப்பானிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது வேதாந்தா நிறுவனம்.
இதனிடையே வேதாந்தாவின் Display Manufacturing பிஸினஸானது அதன் யூனிட் Avanstrate Inc-ஆல் வழிநடத்தப்படுகிறது, இது LCD பேனல்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு கிளாஸை உருவாக்குகிறது மற்றும் தென் கொரியா மற்றும் தைவானில் உற்பத்தி செயல்பாடுகளையும் கொண்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் AR/VR-க்கான வேஃபர் கிளாஸ், அல்ட்ரா-தின் கிளாஸ் மற்றும் கிளாஸ்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. கடந்த 2021 டிசம்பரில் இந்தியாவில் ஃபேப்ஸ் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி யூனிட்ஸ்களை அமைக்க, க்ளோபல் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தியாளர்களை ஈர்க்க ரூ.76,000 கோடி Production-linked incentive (PLI) திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business