முகப்பு /செய்தி /வணிகம் / என்னது UPIயில் பணம் செலுத்தினாலும் கட்டணமா? ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்

என்னது UPIயில் பணம் செலுத்தினாலும் கட்டணமா? ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்

மாதிரி படம்

மாதிரி படம்

UPI Transaction | இந்த கட்டணம் ஒருவருக்கொருவர் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜிபே, பேடிஎம் உள்ளிட்ட செல்போன் செயலிகள் வழியாக 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அனுப்பினால் ஒரு சதவிகிதம் கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. கிராமங்களில் கூட தற்போது பண பரிவர்த்தனை நடைபெற்று கொண்டிருக்கிறது. சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பை விட குறைந்து விட்டது. தற்போதெல்லாம் பேடிஎம், கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை செயலிகளை கிராமங்கள் உட்பட பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

top videos

    இந்நிலையில், ஆன்லைனில் UPI மூலம் ரூ.2,000க்கும் அதிகமான வணிக ரீதியிலான பணப்பரிமாற்றங்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், NPCI வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சிறிய கடைகளில் ரூ.2,000க்கும் அதிகமான தொகை பணப்பரிமாற்றம் செய்தால், 1.1 சதவீதம் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அரசு நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட், காப்பீடு, ரயில்வே பணப்பரிமாற்றங்களுக்கு 1 சதவீதம் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பல்பொருள் அங்காடி 0.9 சதவீதமும், தொலைத்தொடர்பு அஞ்சலகம், கல்வி, வேளாண்டை, ரியல் எஸ்டேட் போன்ற பணப்பரிவர்த்தனைகளுக்கு 0.7 சதவீதமும் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பெட்ரோல், டீசல் உபயோகத்திற்கான பணப்பரிவர்த்தனைக்கு 0.5 சதவீதம் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த விலை நிர்ணயமானது ஏப்ரல் 1ஆம் தேதி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்ட விலையை மதிப்பாய்வு செய்வதாக என்பிசிஐ (National payments corporation of india) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    First published:

    Tags: Online Transaction, UPI