சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய பெரிய வணிக வளாகங்களை வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது. போன் பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற பல ஆப்கள் மூலமாக நாம் வாங்கும் அனைத்துப் பொருள்களுக்குமான பணத்தை வழங்கி வருவதால் இன்றைக்கு ஆன்லைன் பரிமாற்றம் தான் மக்களிடம் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. கைகளில் கை நிறைய பணம் எடுத்துச்செல்ல தேவையில்லை. ஒரு ஸ்மார்ட்போன் எடுத்துச்சென்றால் போதும்.. நொடியில் பிடித்த பொருள்களை வாங்கி விடும் அளவிற்கு இந்த யுபிஐ பரிமாற்றம் மக்களை தன்னுடைய ஆதிக்கத்தில் வைத்துள்ளது.
இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, என்பிசிஐ எனப்படும் நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா சமீபத்தில் ஓர அறிவிப்பை வெளியிட்டது. அதில், ப்ரீபெய்டு வாலட்களைப் பயன்படுத்தி செலுத்தப்படும் ரூபாய் 2 ஆயிரத்திற்கு அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் கட்டணம் வசூலிக்க பரிந்துரைந்துள்ளது.
இதனையடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சோசியல் மீடியாக்களில் எரிபொருள் 0.5 சதவீதம், தொலைத்தொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயத்திற்கு 0.7 சதவீதம், பல்பொருள் அங்காடிக்கு 0.9 சதவீதம் மற்றும் ரயில்வே டிக்கெட் புக்கிங், மியூட்சுவல் பண்ட், அரசு காப்பீடு போன்றவற்றிற்கு ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தவறான செய்தி வெளியானது. இதனால் யுபிஐ பணப் பரிமாற்றம் மேற்கொள்ளும் போது கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இனி கைகளில் தான் பணம் எடுத்துச்சென்று பொருள்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் அதிகளவில் எழுந்துள்ளது.
Read More : சுமார் 7 லட்சம் மால்வேர் அட்டாக்ஸ்..! கடும் பாதிப்பில் இந்தியா வங்கித்துறை..
இந்நிலையில் தான், கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்ஸ் மூலம் வங்கியிலிருந்து வங்கிக்குப் பணம் செலுத்துவது முற்றிலும் இலவசம் என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. அதே சமயம் பிபிஐ எனப்படும் பிரீப்பெய்டு பேமென்ட் கருவியினைக் கொண்டு ரூபாய் 2 ஆயிரத்துக்கு அதிமாக செய்யப்படும் பரிமாற்றத்திற்கு வணிகர்கள் மேற்கொள்ளும் பரிமாற்றத்துக்கு தான் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதே போல் கிரெடிட் கார்ட், வாலட்டுகளைக் கொண்டு பிபிஐ மூலம் செய்யப்படும் யுபிஐ பரிமாற்றங்களுக்கும் இந்த கட்டணம் பொருந்தும். மேலும் க்யூஆர் கோடு மூலம் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கே இந்த பரிமாற்றக் கட்டணம் பொருந்தும் எனவும் என்பிசிஐ அறிவித்துள்ளது. குறிப்பாக பணப்பரிவத்தனையின் போது பரிமாற்றக் கட்டணம் வணிகர்களால் கடன் அட்டை அல்லது வாலட் கொடுப்பவர்களுக்கு செலுத்தப்படும் போது அது வணிகர்களைப் பாதிக்கலாம். ஆனாலும் இந்த நடைமுறையால் சிறு வணிகர்ள் மற்றும் கடைக்காரர்களை எந்த விதத்திலும் பாதிக்காது. ஏனென்றால் பரிமாற்றக் கட்டணம் என்பது ரூ. 2000 ஆயிரத்திற்கு அதிகமான பரிமாற்றத்திற்குத் தான் வசூலிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.