முகப்பு /செய்தி /வணிகம் / ஆதார் கார்டு போதும்.. வங்கிக்கு போகாமலே பணம் அனுப்பலாம்..!

ஆதார் கார்டு போதும்.. வங்கிக்கு போகாமலே பணம் அனுப்பலாம்..!

மாதிரிப்படம்..

மாதிரிப்படம்..

AePS என்பது NPCI-யால் உருவாக்கப்பட்ட ஒரு வங்கி ஆகும். இது ஆதார் அங்கீகரிப்பு மூலமாக எந்த ஒரு வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட பிசினஸ் கரஸ்பான்டெண்ட் (BC) வாயிலாக மைக்ரோ ஏடிஎம்/கியோஸ்க்/மொபைல் சாதனங்களில் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. 

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆதார் அடிப்படையில் பணம் செலுத்தும் முறையானது (Aadhaar-based payment systems -AePS) ஆதார் எண்ணை அங்கீகாரம் செய்து, கட்டணம் / பேமெண்ட் செலுத்தும் ஒரு முறையாகும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒவ்வொருவருக்கும் வழங்கும் ஒரு தனித்துவமான 12 இலக்க அடையாள எண் தான் ஆதார் என்பது அனைவரும் அறிந்ததே. AePS என்பது ஆதார் அங்கீகரிப்பு செய்வதன் மூலமாக பணப் பரிமாற்றம் நடக்கிறது. மற்ற பேமெண்ட் செயல்முறையைப் போலவே, இதுவும் யுனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (UPI) தளத்தை பயன்படுத்துகிறது.

AePS என்பது NPCI-யால் உருவாக்கப்பட்ட ஒரு வங்கி ஆகும். இது ஆதார் அங்கீகரிப்பு மூலமாக எந்த ஒரு வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட பிசினஸ் கரஸ்பான்டெண்ட் (BC) வாயிலாக மைக்ரோ ஏடிஎம்/கியோஸ்க்/மொபைல் சாதனங்களில் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது.

ஆதார் சார்ந்த பணம் செலுத்தும் முறையின் (AePS) பயன்கள் என்ன?

தங்களது வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைத்துள்ள அனைத்து நபர்களும் ஆதார் சார்ந்த பணம் செலுத்தும் முறை மூலமாக பலனடையும்படி இந்த முறையை NPCI வடிவமைத்துள்ளது. ஆதார் எனேபிள்டு பேங்க் அகௌண்ட் (AEBA) வைத்திருப்பவர்கள் மட்டுமே AePS சேவைக்கு தகுதி பெறுவார்கள். செல்லுபடியாகும் ஆதார் எண் வைத்துள்ள எந்த ஒரு நபரும் தங்களது வங்கியை அணுகி AEBA-வை அமைத்துக் கொள்ளலாம்.

பேலன்ஸ் குறித்த விசாரணை, பணம் எடுத்தல், மற்றும் பணம் அனுப்புதல் போன்ற அடிப்படையான வங்கி சார்ந்த பரிமாற்றங்கள் AePS மூலமாக செய்யப்படுகிறது.

Read More: EPFO -ல் அதிக பென்ஷன் பெற விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம் உள்ளே..!

AePS மூலம் கிடைக்கப்பெறும் சேவைகள்

  • பேலன்ஸ் குறித்த விசாரணை
  • பணம் எடுத்தல் (கேஷ் வித்டிராயல்)
  • பணம் அனுப்புதல் (கேஷ் டெபாசிட்)
  • ஒரு ஆதாரில் இருந்து மற்றொரு ஆதாருக்கு பணப் பரிமாற்றம்(C2B, C2G பரிமாற்றங்கள்)

வாடிக்கையாளர்கள் AePS பரிமாற்றம் எப்படி செய்வது என்பது குறித்த விரிவான வழிகாட்டி:

  • ஆதார் எண்
  • வங்கி பெயர்
  • ஆதார் எண் எடுக்கும் போது சேகரிக்கப்பட்ட பயோமெட்ரிக்
  • பரிமாற்ற வகை (தேவைப்பட்டால்)

ஆதார் சார்ந்த பணம் செலுத்தும் முறையின் பயன்கள்

எந்த ஒரு வங்கிக்கும் செல்லாமலும், தேவையான ஆவணங்களை சுமந்து செல்லாமலும், பின் நம்பர், பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக் கொள்ளாமலும், தங்களது வீட்டில் இருந்து கொண்டே வங்கி சேவைகளைப் பெறலாம். மேலும் வியாபாரிகள் தங்களது வாடிக்கையாளர்களின் ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக் போன்ற தகவல்களைப் பெற்றுக்கொண்டு பொருட்களை விற்பனை செய்யும் வசதியும் இதில் உண்டு.

பணப் பரிமாற்றம் செய்வதற்கு ஆதார் கார்டு தேவையா?

ஒவ்வொரு முறையும் ஆதார் கார்டை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பணப் பரிமாற்றம் செய்வதற்கு கட்டாயமாக உங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்திருக்க வேண்டும்.

பணப் பரிமாற்றம் நிறைவேறாத பட்சத்தில் வாடிக்கையாளர்கள் புகார் எழுப்பும் வசதி உள்ளதா?

ஏதேனும் புகார் இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை அணுகி புகாரை கொடுக்கலாம். இதன் பிறகு NPCI-ன் டிஸ்ப்யூட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் மூலமாக தகுந்த வங்கிக்கு உங்களது புகார் அனுப்பப்படும்.

ஆதார் எண் மட்டும் தெரிந்து வைத்திருந்தால் போதும். இனி கவலை இல்லாமல் வீட்டில் இருந்து கொண்டே எளிதாக பிறருக்கு பணம் அனுப்பலாம். இந்த மமுறையை நீங்களும் பயன்படுத்தி பலன் பெறுங்கள்!!

First published:

Tags: Aadhaar card, Bank