Verify Mobile Number Seeded With Aadhaar: பயனாளிகள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அனுமதி அளித்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில், தங்களுடைய ஆதார் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மக்களுக்குத் தெரியவில்லை என்பது யுஐடிஏஐ கவனத்திற்கு வந்தது. எனவே ஆதாருடன் தொடர்புடைய ஒரு முறை கடவுச் சொற்கள் வேறு ஏதேனும் எண்ணுக்குப் போய்விடுமோ என மக்கள் கவலைப்பட்டனர். இப்போது, இந்த வசதியின் மூலம், மக்கள் இதை மிக எளிதாகச் சரிபார்க்கலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://myaadhaar.uidai.gov.in/) அல்லது mAadhaar செயலியில் ‘ Verify Email/Mobile’ அம்சத்தின் கீழ் இந்த வசதியைப் பெறலாம். குறிப்பிட்ட மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணை குறிப்பிட்டு send OTP வந்தால் உங்கள் ஆதாருடன் எண் இணைக்கப்பட்டுள்ளது என அர்த்தம். அதற்கான ஆப்ஷன் வராத பட்சத்தில் உங்கள் ஆதாருடன் குறிப்பிட்ட எண் இணைக்கப்படவில்லை என அர்த்தம்.
அவர்களது ஆதாருடன் இணைக்கப்படாத பட்சத்தில் அதனைத் தெரிவிப்பதோடு, அவர்கள் விரும்பினால், மொபைல் எண்ணைப் புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளைகளையும் அதில் அறிந்து கொள்ளலாம்.
ஆதார் பதிவு செய்யும்போது கொடுத்த மொபைல் எண் நினைவில் இல்லை என்றால், அதே தளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்ணின் கடைசி மூன்று எண்கள் தெரியவரும்.
இதையும் வாசிக்க: அதிக வட்டி வேணுமா? எஸ்பிஐ முதல் இந்தியன் வங்கி வரை. தெரிஞ்சுக்க வேண்டிய வைப்பு நிதி விவரம்!
மின்னஞ்சல்/மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்கவோ, புதுப்பிக்கவோ விரும்பினால், மக்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் செல்லலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhar