முகப்பு /செய்தி /வணிகம் / FD கணக்கிற்கு 8.75 சதவீதம் வரை வட்டி தரும் 5 முக்கிய வங்கிகள்...

FD கணக்கிற்கு 8.75 சதவீதம் வரை வட்டி தரும் 5 முக்கிய வங்கிகள்...

அதிக வட்டி வழங்கும் வங்கிகள்

அதிக வட்டி வழங்கும் வங்கிகள்

நிலையான வைப்பு கணக்கிற்கு அதிகமாக வட்டி வழங்கும் 5 வங்கிகள் பற்றி இங்குத் தெரிந்துகொள்ளலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நிலையான வைப்புத் தொகை (Fixed Deposit)கணக்குகளுக்குச் சராசரியான 7.5 சதவீதம் வரை தனியார் வங்கிகள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரெப்கோ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் 6.5 சதவீதமாக வைத்துள்ளது. இதனால், சில தனியார் வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்து வழங்கி வருகின்றனர்.

அதிலும் சில குறிப்பிட்ட வங்கிகள் 8 சதவீதத்திற்கும் அதிகமான வட்டியை 1 முதல் 2 ஆண்டுகளில் வழங்கி வருகிறது. அவை எந்த வங்கிகள் மற்றும் அவற்றின் வட்டி சதவீதம் பற்றிப் பார்க்கலாம்.

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி : Unity Small Finance Bank

இந்த வங்கி 1-2 ஆண்டுகள் உள்ள நிலையான வைப்பு கணக்குகளுக்கு அதிகப்படியாக 9.25 சதவீதம் வரை வட்டி வழங்கிவருகிறது.

காலம்பொது FDமூத்த குடிமக்களுக்கான FD
1 வருடம்7.35%7.85%
1 வருடம் 1 நாள்7.35%7.85%
501 நாள்8.75%9.25%
502 நாட்கள்- 18 மாதம்7.35%7.85%

சூர்யோதாய் சிறு நிதி வங்கி : Suryoday Small Finance Bank

இந்த வங்கி 2 வருடக்கால நிலையான வைப்பு கணக்கிற்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

காலம்பொது FDமூத்த குடிமக்களுக்கான FD
1 வருடம்6.85%7.35%
2 வருடம்8.50%9.00%

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி : Ujjivan Small Finance Bank

உஜ்ஜீவன் வங்கி 1-2 ஆண்டுகள் உள்ள நிலையான வைப்பு கணக்குகளுக்கு 8.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் வட்டி அதிகமாக வழங்கப்படுகிறது.

காலம்வட்டி விகிதம்
9 மாதங்கள் - 12 மாதங்கள்6.50%
13 மாதங்கள் - 559 நாட்கள்8.00%
560 நாட்கள்8.25%
561 நாட்கள் - 989 நாட்கள்7.50%

உத்கர்ஷ் சிறு நிதி வங்கி : Utkarsh Small finance Bank

இந்த வங்கி 2 கோடிக்கும் குறைவாக உள்ள நிலையான வைப்பு கணக்குகளுக்கு 7.75 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

காலம்பொது FDமூத்த குடிமக்களுக்கான FD
365 நாட்கள் - 699 நாட்கள்7.75 %8.50 %

ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி : Equitas Small Finance Bank

இந்த வங்கி 1-2 ஆண்டுகள் உள்ள நிலையான வைப்பு கணக்குகளுக்கு 8.20 சதவீதம் வட்டி வரை அளிக்கிறது. மேலும் மூத்த குடிமக்கள் கணக்குகளுக்கு 0.50 சதவீதம் அதிகமாக வட்டி அளிக்கிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளது.

காலம்பொது FD
1 வருடம் - 18 மாதங்கள்8.20 %
18 மாதங்கள் -2 வருடம்7.75%

top videos

    இந்த 5 வங்கிகளும் நிலையான வைப்பு கணக்குகளுக்கு அதிக அளவிலான வட்டியை வழங்கி வருகின்றன. 2 வருடங்கள் மட்டும் அதாவது குறுகிய கால நிலையான வைப்பு கணக்கு தொடங்க விரும்ப உள்ளவர்கள் இந்த 5 வங்கிகளில் உங்களுக்குச் சரியான ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

    First published:

    Tags: Banks, Fixed Deposit, Interest rate