முகப்பு /செய்தி /வணிகம் / அதிக வட்டி கொடுக்கும் 3 முக்கிய வங்கிகள்.. விவரம் இதோ!

அதிக வட்டி கொடுக்கும் 3 முக்கிய வங்கிகள்.. விவரம் இதோ!

நிலையான வைப்பு கணக்கு

நிலையான வைப்பு கணக்கு

நிலையான வைப்பு கணக்கிற்கு (Fixed Deposit) அதிக வட்டி வழங்கும் மூன்று முக்கிய வங்கிகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சேமிப்பு திட்டங்களில் முக்கியமானதாக இருப்பது நிலையான வைப்புத் தொகை சேமிப்பு திட்டம்(Fixed Deposit). பல்வேறு வங்கிகள் நிலையான வைப்பு கணக்கிற்கு என்று அதிக வட்டி வழங்கி வருகின்றன. சமீபத்தில் ரிசர்வ் வங்கியான ரொப்கோ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் 6.5 சதவீதமாக நிர்ணயித்தது. இதனால் வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன.

அந்த வகையில், அரசு வங்கிகளில் நிலையான வைப்பு கணக்கிற்கு அதிக வட்டி வழங்கும் 3 முக்கிய வங்கிகளாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India), பேங்க் ஆப் பாரோடா (Bank of Baroda), பஞ்சாப் நேசனல் வங்கி (Punjab National Bank) ஆகிய உள்ளன. சமீபத்தில் நிலையான வைப்பு கணக்கிற்கு வழங்கும் வட்டி விகிதத்தை பேங்க் ஆப் பாரோடா மற்றும் பஞ்சாப் நேசனல் வங்கி உயர்த்தியுள்ளன.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா :

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்பு கணக்கிற்கு என்று அதிக வட்டி வழங்கி வருகிறது. பொது மக்களுக்கு நிலையான வைப்பு கணக்கிற்கு 3 சதவீதத்தில் இருந்து 7.10 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றது. மேலும், மூத்த குடிமக்களுக்கான கணக்குகளுக்கு 3.50 சதவீதம் முதல் 7.60 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை 2 கோடிக்கும் குறைவாகத் தொடங்கப்படுகின்ற நிலையான வைப்பு கணக்குகளுக்கு இந்த சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் "Amrit Kalash" என்ற பெயரில் 400 நாட்களில் முதிர்ச்சி அடையும் FD திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பொது கணக்கிற்கு 7.10 சதவீதமும், மூத்த குடிமக்கள் கணக்கிற்கு 7.60 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட திட்டம் ஏப்ரல் 12 முதல் ஜூன் 30 வரை மட்டுமே செயல்படுத்தப்படும்.

பேங்க் ஆப் பாரோடா :

பேங்க் ஆப் பாரோடா சமீபத்தில் அவர்களின் வட்டி விகிதத்தை அதிகரித்தன. அதன்படி, 7.25 சதவீதம் வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. ரூ.2 கோடிக்குக் குறைவான 7 நாள் முதல் 399 நாட்கள் வரை நிலையான வைப்பு கணக்குகளுக்கு இந்த வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் மே 12 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Also Read : Google payக்கு டஃப் கொடுக்குமா Zomato UPI..! முழு விவரம்..

பஞ்சாப் நேசனல் வங்கி :

பஞ்சாப் நேசனல் வங்கி சமீபத்தில் ரூ.2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்பு கணக்குகளுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. பொது FD கணக்குகளுக்கு 7.25 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதமும், மிகவும் மூத்த குடிமக்களுக்கு 444 நாட்கள் கொண்ட FD கணக்குகளுக்கு 8.05 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. தொடர்ந்து, 666 நாட்கள் வரை உள்ள FD கணக்கிற்கு 7.55 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.85 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் மே 18 ஆம் தேதியில் இருந்து அமலில் உள்ளது.

தனியார் வங்கிகளில் நிலையான வைப்பு கணக்கிற்கு வழங்குவது போலவே அரசு வங்கிகளிலும் சிறந்த வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

First published:

Tags: Bank of Baroda, Interest rate, Punjab National Bank, State Bank of India