சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியது. அதன்பிறகு, பல மாநில அரசுகள் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. அதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளார்.
அகவிலைப்படி உயர்வு குறித்த இந்த முடிவு ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் கருவூலத்தில் ஆண்டுக்கு ரூ.2,366.82 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோர் பயனடைவார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி :
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மார்ச் 24 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Also Read : வட்டி விகிதத்தை உயர்த்திய ஃபெடரல் வங்கி.. இன்று முதல் அமல்.. முழு விவரம் இதோ..
மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு வரும் 2024 இல் ஜனவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வால் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central government, DA, Tamil Nadu