தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான அறிவிப்புகளை பார்ப்போம்.
தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்படும். இதற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம செய்யப்படுகிறது. இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை திருச்சிராப்பள்ளி, சேலம் மாநகராட்சியின் முக்கிய பொது இடங்களில் இலவச wifi சேவைகள் வழங்கப்படும்.
சோழப் பேரரசு புகழை உலகறிய செய்ய தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
மதுரை மாநகரம் தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 521 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை முதல் அண்ணாசாலை வரை நான்கு வழி சாலை மேம்பாலம் கட்டப்படும். இதன்மூலம் சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.
சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் நீர்வழிகள் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் சென்னையின் முக்கிய ஆறுகளாகத் திகழும் அடையார் மற்றும் கூவம் ஆறுகளை மேம்படுத்த ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு.
கோவையில் ரூ.172 கோடி செலவில் இரண்டு கட்டங்களாக செம்மொழி பூங்கா அமைக்கப்படும்.
சேலத்தில் ரூ.880 கோடி மதிப்பீட்டில் 119 ஏக்கரில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும். ஜவுளி பூங்கா அமைக்கப்படுவது மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.