எப்.சி.ஆர்.ஏ லைசன்ஸ் என்று கூறப்படும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் அடிப்படையிலான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் லைசென்சை மத்திய அரசு 2025 ஆம் ஆண்டு வரை புதுப்பித்துள்ளது.
வெளிநாடுகளை சேர்ந்த அமைப்புகளிடம் இருந்தும், நபர்களிடம் இருந்தும் நன்கொடை பெரும் நிறுவனங்கள்,
அறக்கட்டளைகள், அமைப்புகள் ஆகியவை தங்கள் நிறுவனத்தை வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசிடம் பதிவு செய்து உரிய லைசன்ஸ் பெற வேண்டும்.
மத்திய அரசு எப் சி ஆர் ஏ லைசன்ஸ் வழங்கினால் மட்டுமே அந்த நிர்வாகம் தங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து இந்திய பணமாக மாற்றி கொள்ள முடியும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் தங்கள் நாடுகளின் கரண்சிகளை ஏழுமலையானுக்கு காணிக்கையாக உண்டியலில் சமர்ப்பித்து செய்கின்றனர்.எனவே பக்தர்கள் மூலம் காணிக்கையாக கிடைத்த வெளிநாட்டு கரன்சிகளை வங்கிகளில் டெபாசிட் செய்து இந்திய ரூபாயாக மாற்றுவதற்கு தேவையான எப் சி ஆர் ஏ லைசன்ஸ் தேவஸ்தானத்திற்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 2019 வது ஆண்டு முதல் தேவஸ்தானத்தில் எப்.சி. ஆர்.ஏ லைசன்ஸ் புதுப்பிக்கப்படவில்லை.
ஆனாலும் தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் மூலம் வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துக் கொண்டிருந்தன. இந்திய ரூபாயில் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வகையான வெளிநாட்டு கரண்சிகள் தற்போது தேவஸ்தானத்திடம் உள்ளன.
எப்சிஆர்ஏ லைசன்ஸ் புதுப்பிக்கப்படாத காரணத்தால் அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்ய இயலாத நிலை தேவஸ்தானத்திற்கு ஏற்பட்டது. லைசென்ஸ் புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை தேவஸ்தானம் மேற்கொண்ட போது சரியான விளக்கம் அளிக்காத காரணத்தால் தேவஸ்தானத்திற்கு ரிசர்வ் வங்கி முதலில் பத்து கோடி ரூபாய் அபராத விதித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து தேவஸ்தானம் எடுத்த பல்வேறு முயற்சிகளுக்குப் பின் அபராத தொகை 3 கோடிய 29 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டது. இது பற்றிய தகவல்கள் ஊடகங்களில் இரண்டு நாட்களுக்குள் முன் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேவஸ்தானம் மேற்கொண்ட தீவிர முயற்சிகளின் காரணமாக 2025 ஆம் ஆண்டு வரை தேவஸ்தானத்தின் எஃப்சிஆர்ஏ லைசென்சை மத்திய அரசு நேற்று புதுப்பித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirumala Tirupati, Tirupati