16வது ஐபிஎல் விளையாட்டு போட்டியின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பார்ட்னரான ஜியோ சினிமா, விளம்பரச் சந்தையில் (AdEx) ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ சினிமாவின் நிகழ்நேர கண்காணிப்பு வசதி மூலம் (real-time number tracking system) விளம்பரதாரர் ஒருவர் தனது நிறுவன விளம்பரம் எவ்வளவு மக்களிடம் சென்றடைகிறது என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும். இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் அதிகமான மக்கள் IPL விளையாட்டு போட்டிகளைப் பார்த்து வருவதால், தளத்தின் சராசரி பார்வை விகிதம் (Concurrency rate) கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு கூடுதலாக உள்ளது. அதே போன்று, எந்த ஒரு விளையாட்டுப் போட்டியிலும் இதுவரை இல்லாத வகையில், இந்த சீசன் ஐபிஎல் போட்டிகளின் ஸ்பான்சர்களின் எண்ணிக்கை மட்டும் 26ஐ எட்டியுள்ளது.
ஜியோ சினிமாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு குறித்து கருத்து தெரிவித்த Viacom18 Sports நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனில் ஜெயராஜ், ’அனைவருக்கும் நன்மை பயக்கும், அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான அமைப்புகளை டிஜிட்டல் கொண்டுள்ளது. மேலும், டிஜிட்டல் கட்டமைப்பு அளவிடக்கூடியதாகவும், இலக்கினை நோக்கி பயணிக்க கூடியதாகவும் இருக்கிறது. ஜியோ மூலம், விளம்பரத்தாரர் தனது விற்பனையை பெருக்கி கொள்ள முடியும்" என்று தெரிவித்தார்.
ஜியோ சினிமா ஐபிஎல் புரட்சியை ஏற்படுத்தியிருப்பதாக டாடா மோட்டார்ஸ் மின்சார வாகன தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி விவேக் ஸ்ரீவத்சா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “4K ஸ்ட்ரீமிங், மல்டிகேம், பல மொழி விருப்பங்கள் ஆகிய மேம்படுத்துப்பட்ட தொழில்நுட்பத்துடன் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஆன்லைனில் பார்வையாளர்களுக்கு இது வழங்குகிறது. இது, உண்மையிலே ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், பரந்துபட்ட மக்கள் ஐபிஎல் போட்டிக்குள் வந்தனர்.
மேலும், விளம்பர விநியோகத்தில் உள்ள புதுமைகள் எங்களுக்கு பெரிதும் பயனளித்தன. ஜியோ சினிமா மூலம் எங்களின் Tiago.ev மின்சார வாகனம் மக்கள் மத்தியில் விரைவான வரவேற்பைப் பெற்றுள்ளன. பெருநகரங்களுக்கு மட்டுமல்லாது, சிறிய நகரங்களுக்கும் கொண்டு செல்ல எங்களுக்கு உதவியது" என்று தெரிவித்தார்.
Madison Digital நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சின்சங்கர் கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்கள் சிறந்த அனுபவங்களைப் பெற்றுள்ளனர். விளம்பரம் யாரை சென்றடைய வேண்டுமோ அவர்களை சென்றடைந்தது. ஏனெனில், எங்கள் பொருட்களை வாங்குவதற்கான ஆயத்த நிலையில் மக்கள் உள்ளனர் என்பதை நாங்கள் கண்டறிகிறோம் என்று தெரிவித்தார்.
சமீபத்திய TAM அறிக்கையின்படி, சாதாரண HD டிவியுடன் ஒப்பிடுகையுள் ஸ்மார்ட் டிவியில் (Connected TV) வெளியான விளம்பரங்கள் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளன. ஸ்மார்ட் டிவி போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் நுகர்வோரின் பொருளாதார நிலை, மன நிலை, சமக் கால தேவைகளை அறிந்து நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பதாக ஜாக்வார் குழுமத்தின் பொது மேலாளர் மற்றும் தலைமை சந்தைப்படுத்தல் தொடர்பாளர் சந்தீப் சுக்லா தெரிவித்துள்ளார்.
Media Partners Asia (எம்பிஏ) என்ற நிறுவனம், ’ஐபிஎல் 2023 பதிப்பு $550 மில்லியன் வருவாயை ஈட்டும் மதிப்பிடப்பட்டுள்ளது.இதில் 60% பங்குகளை டிஜிட்டல் தளங்கள் கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. 16-வது ஐபிஎல் தொடக்க வாரத்தில், ஜியோ சினிமா 147 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது (1.47 பில்லியன்) . Synchronise and Unomer report அறிக்கையின்படி, ஐபிஎல் பார்வையாளர்களில் 73% பேர் ஜியோ சினிமா பார்வையாளர்கள் என்று தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.