ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இருக்கும். வீடு வாங்குவது என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் மிகப்பெரிய செலவுகளில் ஒன்று. இதற்காக, நாம் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சேமித்து வீடு அல்லது சொத்து வாங்குகிறோம். அப்படி கனவுகளோடு வாங்கிய சொத்தை சில சமயங்களில் சில காரணங்களால் விற்க நேரிடுகிறது. வீடு வாங்குவது எவ்வளவு சிரமமோ, வீட்டை விற்பதும் எளிதான காரியம் அல்ல. ஒரு வீட்டை விற்பதற்கு பல விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன.
சொத்து பரிவர்த்தனைக்காக நாம் ஒப்பந்தம் போடும் போது ரொக்கமாக ரூ.19,999க்கு மேல் எடுக்க முடியாது. இதற்காக, 2015ல், வருமான வரிச் சட்டத்தின் 269எஸ்எஸ், 269டி, 271டி மற்றும் 271இ ஆகிய பிரிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில், 269 SS இல் செய்யப்பட்ட மாற்றம் மிகவும் முக்கியமானது. கறுப்புப் பணத்தைத் தடுக்கும் நோக்கத்தில் அரசு இதைச் செய்துள்ளது. ரொக்க பண பரிவர்த்தனை செய்யும் போது, அந்தப் பணம் சட்டப்பூர்வமாக சம்பாதித்ததா அல்லது சட்டவிரோதமாக சம்பாதித்ததா என்பதைக் கண்டறிவது கடினம். அதற்காகத்தான் மத்திய அரசு சில கடுமையான கடுடுப்பாடுகளை விதித்துள்ளது.
பிரிவு 269 SS இன் கீழ், ஒருவர் நிலம் (அது விவசாய பயன்பாட்டிற்காக இருந்தாலும்), வீடு மற்றும் இதர அசையாச் சொத்துக்களை விற்பதற்காக ரூ.20,000 அல்லது அதற்கு மேல் ரொக்கமாக எடுத்துக் கொண்டால், அவருக்கு 100% அபராதம் விதிக்கப்படும். வருமான வரிச் சட்டம் 269 எஸ்எஸ் பிரிவின் கீழ், ஒரு நபர் ஒரு சொத்தை விற்கும்போது ரூ.20,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக எடுத்துக் கொண்டால், அந்த முழுத் தொகையும் இழப்பீடாகச் செலுத்தப்பட வேண்டும். அதாவது நீங்கள் ரூ.50,000 அல்லது ரூ.1 லட்சம் எடுத்திருந்தாலும், அந்தத் தொகை முழுவதும் வருமான வரித் துறைக்கு அபராதமாகச் செல்லும்.
மற்றொரு முக்கியமான விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏதோ சில காரணங்களால் சொத்து பரிவர்த்தனைக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். வாங்குபவர், சொத்து வியாபாரி அல்லது விற்பனையாளரிடம் பணத்தைத் திரும்பக் கேட்டால், மீண்டும் அபராதம் விதிக்கப்படும். ரூ.20,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக திருப்பி அனுப்பினால், முழுத் தொகையும் 269SS பிரிவின் கீழ் அபராதத்திற்குச் செலுத்த நேரிடும். இருப்பினும், இந்த சட்டம் அரசு, அரசு நிறுவனம், வங்கி நிறுவனம் அல்லது மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட தனி நபர் மற்றும் நிறுவனத்திற்கு பொருந்தாது.
Also Read : Gold Rate Today | அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?
சொத்து பேரங்களில் ரூ.19999 வரை பணப் ரொக்கமாக பரிவர்த்தனை செய்யலாம். இது உங்கள் கணக்கில் வந்து விடும். இதற்கு மேல் உள்ள தொகையை காசோலை அல்லது மின்னணு பரிவர்த்தனை (இன்டர்நெட் பேங்கிங்) மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். பணப் பரிவர்த்தனைகள் காரணமாகப் பதிவாளர்கள் பொதுவாக சொத்துகளுக்கான பதிவுகளை ரத்து செய்ய மாட்டார்கள்.
அவர்கள் பதிவு நடவடிக்கையை மேற்கொள்வார்கள். ஆனால் பணப் பரிவர்த்தனை தொடர்பான தரவுகளை வருமான வரித்துறைக்கு அனுப்புவார்கள். அதன் பிறகான சட்டச் சிக்கல்களை நீங்கள் தான் எதிர் கொள்ள வேண்டும். எனவே சொத்தை விற்கும் போது வருமான வரிச் சட்டத்தின் விதிமுறைகளை கவனமாக கையாள வேண்டியது மிக அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Property