முகப்பு /செய்தி /வணிகம் / அப்பாவின் சொத்தில் மகளுக்கு பங்கு இருக்கிறதா..? இந்திய சட்டம் என்ன சொல்கிறது..?

அப்பாவின் சொத்தில் மகளுக்கு பங்கு இருக்கிறதா..? இந்திய சட்டம் என்ன சொல்கிறது..?

மாதிரிப்படம்..!

மாதிரிப்படம்..!

பெரும்பாலான பெண்களுக்கு ஆண்களைப் போன்று தங்களுக்கும் சொத்தில் சம உரிமை இருப்பது தெரிவதில்லை. தங்களுக்கு தந்தையின் சொத்தில் எந்த உரிமையும் இல்லை என்றே அவர்கள் நம்புகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களின் படி, 2005 ஆம் ஆண்டில், இந்து வாரிசுச் சட்டத்தில் (1956), மகள்களுக்கும் அவர்களின் தந்தையின் சொத்தில் சமமான பங்கு இருப்பதாக சட்டப்பூர்வ உரிமை உறுதி செய்து திருத்தம் செய்யப்பட்டது. 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ், இந்தியாவில் மகள்களுக்கும் மகன்களைப் போன்று சமமான உரிமை உள்ளது என்று சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், ஆண் பெண் என்ற வேறுபாடுகள் இன்றும் பல குடும்பங்களில் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. சொத்து என்று வந்தால், பெண்களை விட ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பல குடும்பங்கள் இன்றைய கால கட்டத்திலும் உள்ளனர். இது அவர்கள் மனதில் வேரூன்றி இருக்கும் ஒரு விஷயமாக உள்ளது என்றும் சொல்லலாம்.

பெரும்பாலான பெண்களுக்கு ஆண்களைப் போன்று தங்களுக்கும் சொத்தில் சம உரிமை இருப்பது தெரிவதில்லை. தங்களுக்கு தந்தையின் சொத்தில் எந்த உரிமையும் இல்லை என்றே அவர்கள் நம்புகின்றனர். ஆண்களைப் போன்று தங்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்பது குறித்த போதிய விழிப்புணர்வு அவர்களிடத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மகன்களுக்குத் தான் சொத்தில் உரிமை உண்டு என்ற காலம் மலையேறி, மகள்களின் பரம்பரை உரிமைகள் தொடர்பாக நன்கு வரையறுக்கப்பட்ட சட்ட விதிமுறைகள் தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ளன. எத்தகைய சூழலில் அவர்கள் தங்கள் தந்தையின் சொத்தில் உரிமை கோர முடியாது என்றெல்லாம் தெளிவாக வகுக்கப்பட்டு உள்ளது. தந்தையின் சொத்து தொடர்பான மகள்களின் உரிமைகளை நிர்வகிக்கும் சட்ட விதிகளை இந்தப் பதிவில் தெளிவாகக் காண்போம்.

Read More : ஆதார் கார்டு புதுப்பிக்க உத்தரவு.. ஆன்லைன் மூலம் அப்டேட் செய்வது எப்படி?

தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களின் படி, 2005 ஆம் ஆண்டில், இந்து வாரிசுச் சட்டத்தில் (1956), மகள்களுக்கும் அவர்களின் தந்தையின் சொத்தில் சமமான பங்கு இருப்பதாக சட்டப்பூர்வ உரிமை உறுதி செய்து திருத்தம் செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, தந்தையின் சொத்தில் மகன்களைப் போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு. 2005 இல் செய்யப்பட்ட திருத்தமானது, தந்தையின் சொத்தின் மீது மகள்களுக்கு இருக்கும் உரிமைகளை மேலும் வலுப்படுத்தியது மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி நிலவிய குழப்பத்தையும் நீக்கியது.

எப்போது பெண்களால் தங்கள் தந்தையின் சொத்தில் உரிமை கோர இயலாது? : அப்பாவின் சொத்து, அவர் சுயமாக சம்பாதித்த சொத்தாக இருக்கும் பட்சத்தில், மகள் அதனை உரிமை கோர இயலாது. தந்தை தனது சொந்த சம்பாத்தியத்தில் நிலம் வாங்கி, வீடு கட்டியிருந்தால் அல்லது சொத்துக்களைப் வாங்கி இருந்தால், அவர் விரும்பியவருக்கு (மகன் அல்லது மகள்) அதை பரிசளிக்க அல்லது எழுதி வைக்க அவருக்கு சட்டப்பூர்வமாக அனைத்து உரிமையும் உண்டு. இத்தகைய சூழலில், தந்தை தனது சொத்தில் ஒரு பகுதியை மகளுக்கு வழங்க மறுத்தால், அவரின் முடிவை எதிர்த்து மகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதையே இது குறிக்கிறது.

top videos

    திருமணமான பெண் என்றால் இந்தச் சட்டம் எவ்வாறு பொருந்தும்? : 2005 ஆம் ஆண்டுக்கு முன், இந்து வாரிசுரிமைச் சட்டப்படி, மகள்களுக்கு குடும்ப சொத்தில் அதாவது மூதாதையர் சொத்துக்கு மகன்களுக்கு சமமான வாரிசாக உரிமை வழங்கப்படவில்லை. மகள்களை, தந்தையின் இந்து பிரிக்கப்படாத குடும்பத்தின் (HUF) உறுப்பினர்களாக மட்டுமே கருதியது. இது திருமணமானப் பெண்களுக்கும் பொருந்தும். இருப்பினும், இந்தச் சட்டம் 2005 இல் திருத்தி அமைக்கப்பட்டதற்குப் பிறகு, மகன்களைப் போல மகள்கள் இப்போது சம வாரிசுகளாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். எனவே, திருமணமான பெண்களுக்கும், அவரவர் தந்தையின் சொத்துக்கான உரிமையை ஒரு போதும் பாதிக்காது. அதாவது, திருமணத்திற்குப் பிறகும் மகள்கள் தங்கள் தந்தையின் சொத்தில் முழு உரிமை கொண்டிருப்பார்கள்.

    First published:

    Tags: Business