மகாராஷ்டிரா மாநிலத்தின் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றான பாவ் பாஜி, அம்மாநில எல்லைகளைத் தாண்டி பல மாநில மக்களுக்கு மிகவும் பிடித்த உணவாக மாறி இருக்கிறது. கடந்த காலத்தில் மும்பையில் மட்டுமே பிரபலமாக இருந்த பாவ் பாஜி, முதலில் மகாராஷ்டிராவில் இருந்த சிறிய நகரங்களுக்கு பரவியது.
மாநிலம் முழுவதும் பிரபலமாக இருந்த நிலையில் ஒருகட்டத்தில் அண்டை மாநிலங்கள் மற்றும் தென்னிந்தியா என நாடு முழுவதும் படிப்படியாக பிரபலமானது. தற்போது எங்கு பார்த்தாலும் பாவ் பாஜி ஸ்டால்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தொழிலில் ஈடுபடுவோருக்கு இந்த பிசினஸ் லாபகரமான ஒன்றாக மாறியுள்ளது.
பல வியாபாரிகளை போலவே தெலுங்கானாவை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் பாவ் பாஜி ஸ்நாக் பாயின்ட் அமைத்து தனது தொழிலில் சிறந்து விளங்குகிறார். ஆனால் இவர் இன்னும் கல்லூரி படிப்பை முடிக்காத மாணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆம், தெலுங்கானாவை சேர்ந்த கல்லூரி மாணவரான சந்தோஷ் தனது கல்லூரி நேரத்திற்கு பிறகு சொந்தமாக பாவ் பாஜி ஸ்டால் நடத்துகிறார். மேலும் இந்த ஸ்டால் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.2,000 சம்பாதிக்கிறார்.
தெலுங்கானாவின் பெத்தபள்ளி மாவட்டத்தை சேர்ந்த மற்றும் பட்டப்படிப்பை இன்னும் முடிக்காத இளைஞரான சந்தோஷ் உள்ளூர் கல்லூரியில் டிகிரி படித்து வரும் நிலையில் தனது கல்வி கட்டணத்திற்காகவும், சமையலில் தனக்கு இருக்கும் திறமையை பயன்படுத்தி வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தாலும் பாவ் பாஜி ஸ்டாலை திறக்க முடிவு செய்து உள்ளார். தனது ஸ்டாலில் விற்கப்படும் பாவ் பாஜிக்கு தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் வெஜ்ஜி ஃப்ளேவர்உள்ளிட்டவற்றை முற்றிலும் சுகாதாரமான முறையில் வீட்டிலேயே தயார் செய்து விடுவதாக கூறுகிறார் சந்தோஷ்.
பாவ் பாஜிக்கு தேவையான பெரும்பாலான பொருட்களை முன்கூட்டியே ரெடி செய்து வைத்து விடுவதால் தனது வாடிக்கையாளர்களுக்கு 5 நிமிடங்களுக்குள் கேட்கும் பாவ் பாஜி-யை சர்வ் செய்து விடுவதாகவும் சந்தோஷ் கூறுகிறார். இவரது ஸ்டாலின் ஸ்பெஷல் பட்டர் பாவ் பாஜி ஆகும். இதற்காக இவர்ஒரு Pan-ல் தேவையான் அளவு பட்டரை வைத்து வெண்ணெய் அது உருகிய பிறகு அவர் pav-வை நடுவே கட் செய்து Pan-ல் அதனை வைத்து உருகிய வெண்ணெயுடன் சேர்த்து கடாயில் ஃப்ரை செய்கிறார். Pan-ல் போட்ட பாவ் சிவப்பாக மாறும் வரை வெண்ணெயோடு சேர்த்து அதனை ஃப்ரை செய்யும் சாந்தோஷ், பின் அதனை ஒரு தட்டில் சூடாக வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறார்.
மாணவர் சந்தோஷ் தனது கல்லூரி வகுப்புகளை முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு தனது ஸ்டாலை திறக்கிறார். இவரது பாவ் பாஜி ஸ்டால் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். தனது தொழிலில் தினமும் சராசரியாக ரூ.2000 வரை சம்பாதிப்பதாக கூறுகிறார் சந்தோஷ். படித்துக் கொண்டே தனியாக ஸ்டால் வைத்து நல்ல வருமானம் ஈட்டும் சந்தோஷ் இதன் மூலம் தனது வயது இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: College student, Telangana, Trending, Viral