தற்போதைய நிலையில் ஆன்லைன் விளையாட்டுக்களை பலர் விளையாட்டி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்தும் வருகின்றன. இதனால்தான் இந்த ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதேவேளையில் இந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் வரி உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?
குறிப்பாக ரம்மி போன்ற பல்வேறு ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் மக்கள் பணம் ஈட்டுவதை அதிகம் விரும்புகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள யூனியன் பட்ஜெட் 2023-24 ல் ஆன்லைன் விளையாட்டுக்களின் மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு 30% வரை வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் மட்டுமே வரிவிதிப்பு என்று இருந்த அளவை நீக்கி, இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் புதிய சட்டமானது அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் ஆன்லைன் விளையாட்டுக்களின் மூலம் பணம் ஈட்டுபவராக இருந்தால் அந்த வருமானத்தின் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
ஆன்லைன் விளையாட்டு வீரர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:
தற்போது வரை ஆன்லைன் விளையாட்டுக்களின் மூலம் விளையாட்டு வீரர்கள் பெரும் வருமானம், ரூபாய் 10 ஆயிரத்தை தாண்டும் போது மட்டுமே அவர்களுக்கு வரிவிதிப்பு செய்யப்பட்டு வந்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள நிதி மசோதாவின் படி அப்படிப்பட்டவரையறைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஈட்டும் ஒவ்வொரு ரூபாய் வருமானத்திற்குமே இனி வரி செலுத்த வேண்டி இருக்கும்.எனவே தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி விளையாட்டு நிறுவனங்கள் அனைத்துமே தங்களது வாடிக்கையாளர்கள் ஈட்டும் வருமானத்தில் இருந்து 30 சதவீதத்தை TDS முறையில் பிடித்தம் செய்து கொள்கின்றன..
Read More : வீடு, காரை வங்கியில் லோன் வாங்கி வாங்க போறீங்களா...? இதெல்லாம் முக்கியமா கவனிங்க..!
இவ்வாறு எந்தவிதமான ஆன்லைன் விளையாட்டுக்களின் மூலம் சம்பாதிக்கப்படும் பணத்திற்கும் ஒரே விதமான வரி விதிப்பை மத்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.இதன் காரணமாக கேமிங் துறையில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுக்களின் மூலம் பணம் ஈட்டுபவர்கள் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய புதிய நிதி மசோதாவிற்கு ஏற்ப அவர்கள் தங்களது திட்டங்களை மாற்ற அமைக்க வேண்டியது இருக்கும்.
ஒருவேளை பணம் உங்களுக்கு கிடைக்கும் போதே அதில் வரி விதிப்பு செய்யப்படவில்லை எனில் அந்த நிதியாண்டு இறுதியில் ஒட்டுமொத்தமாக உங்களுக்கான வரியானது பிடித்தம் செய்யப்படும். ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு என்று புதிதாக இரண்டு பிரிவுகளின் கீழ் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 115NNJ என்று பிரிவின் கீழ் 30 சதவீதம் வரிவிதிப்பும், 194BA என்று பிரிவின் கீழ் ஆண்டு இறுதியில் ஒட்டுமொத்தமாக வரிவிதிப்பும் செய்யப்படும்.
மேலும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டு நிதி மசோதாவின் படி வாடிக்கையாளர்கள் ஈட்டும் வருமானத்திற்கான வரியை வசூல் செய்ய வேண்டிய கடமையை மொத்தமாக அந்தந்த கேமிங் நிறுவனத்திடமே அரசாங்கம் ஒப்படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இதன் மூலம் தற்போது இருப்பதை விட கேமிங் துறையிலும், நிறுவனங்களின் கொள்கைகளிலும் பல்வேறு வித மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Income tax, Online rummy, Tamil Nadu