தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு வருகிறார். ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
முக்கியமான இணைப்பு சாலைகள், பேருந்துகள் இயங்கும் சாலைகள் தரம் உயர்த்தப்படும். வரும் நிதி ஆண்டில் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,145 கிலோ மீட்டர் சாலைகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும். கிராமப் புறங்களில் 618 நீர்நிலைகளில் மொத்தம் 638 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் பத்தாயிரம் சிறிய நீர்நிலைகள், குளங்கள், ஊரணிகள் 800 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்.
தமிழ்நாடு பட்ஜெட் LIVE: பசுமை மின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
வீட்டுவரி, தொழில் வரி, குடிநீர் வரியை ஊராட்சிகளுக்கு இணைய வழியில் எளிதில் செலுத்துவதற்கு ஒரு வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டட வரைபடம் மனை வரைபட அனுமதிகளையும் இணைய வழியில் பெற வழிவகை செய்யப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு இதுவரை 10,914 கோடி ரூபாய் செலவில் சுமார் 31 கோடி வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டில் 35 கோடி வேலை நாட்கள் உருவாக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு 22,562 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு குடிநீர் வசதிகளை மேம்படுத்துவதற்காக உயிர் நீர் ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் 103 கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு 15,734 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TN Budget 2023