முகப்பு /செய்தி /வணிகம் / தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டம்... பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு..!

தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டம்... பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு..!

தெருநாய்கள்

தெருநாய்கள்

அதிகரித்து வரும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கால்நடை பராமரிப்புத் துறை சார்ந்த அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

அதில், “முதலமைச்சர் தலைமையிலான விலங்குகள் நல வாரியம், மாநிலத்தில் விலங்குகளின் நலனை பேணிக்காக்க மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பெருகிவரும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டு மையங்கள் அமைப்பது அவசியமாகும். விலங்குகள் நலவாரியத்தை வலுப்படுத்தி செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு , இம்மதிப்பீட்டில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் மறக்காம படிங்க; Tamil Nadu budget 2023 - 24: தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள டாப் 10 சூப்பர் அறிவிப்புகள் இதோ..!

விலங்குகள் இன விருத்தி கட்டுப்பாட்டு பணிகள் மேற்கொள்ளவும், உள்ளாட்சி ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கவும், விலங்குகள் நலப்பணிகளை செயல்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Dog, TN Budget 2023