தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000, அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் உள்பட துறை வாரியாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க; சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்....
அதன்படி, கல்வித்துறைக்கு என அதிகபட்சமாக 47 ஆயிரத்து 266 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு 40 ஆயிரத்து 299 கோடி ரூபாயும், உயர்கல்விக்கு 6 ஆயிரத்து 967 கோடி ரூபாயும் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. கல்வித்துறைக்கு அடுத்தபடியாக நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு 38 ஆயிரத்து 444 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஊரக வளர்ச்சித் துறைக்கு 22 ஆயிரத்து 562 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள் துறைக்கு 19 ஆயிரத்து 465 கோடி ரூபாயும், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 18 ஆயிரத்து 661 கோடி ரூபாயும், எரிசக்தி துறைக்கு 10 ஆயிரத்து 694 கோடி ரூபாயும், காவல்துறைக்கு 10,812 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர் வளத்துறைக்கு 8 ஆயிரத்து 232 கோடி ரூபாயும், போக்குவரத்து துறைக்கு 8 ஆயிரத்து 56 கோடி ரூபாயும் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக நலனுக்கு 7 ஆயிரத்து 745 கோடி ரூபாயும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கு 3 ஆயிரத்து 513 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TN Budget 2023