முகப்பு /செய்தி /வணிகம் / தமிழ்நாடு அரசின் கடன் இத்தனை லட்சம் கோடியா?... பட்ஜெட்டில் வெளியான தகவல்..!

தமிழ்நாடு அரசின் கடன் இத்தனை லட்சம் கோடியா?... பட்ஜெட்டில் வெளியான தகவல்..!

தமிழ்நாடு அரசின்  கடன்

தமிழ்நாடு அரசின் கடன்

வருவாய் பற்றாக்குறை வரும் நிதியாண்டுகளில் குறைந்து, 2025-26ஆம் ஆண்டில் உபரி வருவாய்க்கு வழிவகுக்கும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000, அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் உள்பட துறை வாரியாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க; கல்விக்கு தான் அதிகம்.. பட்ஜெட்டில் எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு தெரியுமா?

தமிழ்நாடு அரசின் கடன் 7 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், 1 லட்சத்து 43 ஆயிரத்து 198 கோடி ரூபாய் கடன் பெற திட்டமிட்டுள்ளதாகவும், மேலும், 51 ஆயிரத்து 332 கோடி கடனை தமிழ்நாடு அரசு திருப்பி செலுத்தும் என்றும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, வரும் நிதியாண்டின் இறுதியில் அரசின் கடன் 7 லட்சத்து 26 ஆயிரத்து 29 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும், இது 15வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வருவாய் பற்றாக்குறை வரும் நிதியாண்டுகளில் குறைந்து, 2025-26ஆம் ஆண்டில் உபரி வருவாய்க்கு வழிவகுக்கும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

top videos

    2023-24 ஆம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 37 ஆயிரத்து 540 கோடியாக இருக்கும் என்றும், அது 2024-25ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 583 கோடியாக குறைந்து, 2025-26ல் ஆயிரத்து 218 கோடி ரூபாய் உபரி வருவாய் கிடைக்கும் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.

    First published:

    Tags: TN Budget 2023