முகப்பு /செய்தி /வணிகம் / UPSC தேர்வு பயிற்சியில் சேர்ந்தால் ஊக்கத்தொகை.. குட் நியூஸ்

UPSC தேர்வு பயிற்சியில் சேர்ந்தால் ஊக்கத்தொகை.. குட் நியூஸ்

தமிழக பட்ஜெட்

தமிழக பட்ஜெட்

Tamil Nadu Budget 2023 - 24: 2023-24 நிதி ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் துறை சார்ந்த பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில், உயர் கல்வித் துறைக்கு 6,967 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து இந்திய குடிமைப் பணி தகுதித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், 1000 மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

Also Read : அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்... பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு..!

அந்த வகையில், முதல் நிலைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500, முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Higher education, Scholarship, TN Budget 2023, UPSC