தமிழ்நாடு பட்ஜெட் LIVE: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு

Tamil Nadu Budget 2023-24 Live Updates: செப்டம்பர் 15 முதல் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 - பட்ஜெட்டில் அறிவிப்பு

  • News18 Tamil
  • | March 20, 2023, 11:57 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 3 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    13:3 (IST)

    6.கோவையில் ரூ.172 கோடி செலவில் இரண்டு கட்டங்களாக செம்மொழி பூங்கா அமைக்கப்படும்.

    7.ரூ.880 கோடி மதிப்பீட்டில் 119 ஏக்கரில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும்

    8.சென்னையின் முக்கிய ஆறுகளாகத் திகழும் அடையார் மற்றும் கூவம் ஆறுகளை மேம்படுத்த ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு

    9.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.

    10.முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 521 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை முதல் அண்ணாசாலை வரை நான்கு வழி சாலை மேம்பாலம் கட்டப்படும். 

    13:0 (IST)

    பட்ஜெட்டில் அறிவிக்கபட்ட டாப் 10 அறிவிப்புகள்:

    1.தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு வரும் செப்டம்பர் 15ஆம் நாள் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

    2.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம செய்யப்படுகிறது. இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

    3.தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை திருச்சிராப்பள்ளி, சேலம் மாநகராட்சியின் முக்கிய பொது இடங்களில் இலவச wifi சேவைகள் வழங்கப்படும்.

    4.சோழப் பேரரசு புகழை உலகறிய செய்ய தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

    5.மதுரை மாநகரம் தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

    12:57 (IST)

    பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றைய நாள் முடிவுக்கு வந்த நிலையில்,  நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மார்ச் 23, 24, 27, 28 பொது விவாதங்கள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 28ம் தேதி அமைச்சரின் பதிலுரை நடக்கும்

    12:19 (IST)

    அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகள் என தற்போது அறிவித்துள்ளனர். எந்த அடிப்படையில் தகுதியை தேர்வு செய்கிறார்கள்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

    12:17 (IST)

    மூன்று முறை பட்ஜெட் தாக்கல் செய்த போதும் அனைத்து வரிகளையும் உயர்த்தியது தான் மக்களுக்கு இவர்கள் அளித்த பரிசு - எடப்பாடி பழனிசாமி 

    12:16 (IST)

    தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து உள்ளது. 12ம் வகுப்பு தேர்வில் என்றும் இல்லாத அளவிற்கு 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இதையெல்லாம் கண்டித்தும், பொய் வழக்குகள் போடுவதை கண்டித்தும்,அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய அமல் படுத்தவில்லை என்பதை கண்டித்தும் வெளிநடப்பு செய்தோம் - எடப்பாடி பழனிசாமி கேள்வி

    12:8 (IST)

    2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை  நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார். காலை 10 மணிக்கு உரையை தொடங்கிய நிதியமைச்சர் மதியம் 12 மணி வரை தாக்கல் செய்தார். அதில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு இன்றைய பட்ஜெட் முடிவடைவதாகவும் நாளை காலை 10 மணிக்கு மீண்டும் பட்ஜெட் தொடர் தொடங்கும் எனவும் அறிவித்தார்

    12:0 (IST)

    கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் நிதி நிலையை நல்ல முன்னேற்றத்திற்கு கொண்டு வந்துள்ளோம். நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம் - அமைச்சர்

    11:51 (IST)

    மகளிர் பயன் பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதற்காக 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு - நிதி அமைச்சர்

    11:50 (IST)

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்