முகப்பு /செய்தி /வணிகம் / அரசுக்கு எங்கிருந்து வருவாய் வருகிறது..? எவ்வாறு செலவு செய்யப்படுகிறது? - முழு விவரம்..!

அரசுக்கு எங்கிருந்து வருவாய் வருகிறது..? எவ்வாறு செலவு செய்யப்படுகிறது? - முழு விவரம்..!

பட்ஜெட்

பட்ஜெட்

Tamil Nadu Budget 2023 - 24 | மாநில அரசுக்கு எந்தெந்த வழிகளில் வருவாய் கிடைக்கிறது என்பது பற்றியும், அவற்றை எந்தெந்த முறையில் செலவிடுகிறது என்பது பற்றியும் அறியலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் படி, அரசுக்கு 2 லட்சத்து 70 ஆயிரத்து 515 கோடி ரூபாய் வருவாய் வரவு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மூலம் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 182 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வரிகளில் கிடைக்கும் பங்கின் மூலம் 41 ஆயிரத்து 665 கோடி ரூபாயும், மத்திய அரசின் உதவி மானியங்கள் மூலம் 27 ஆயிரத்து 445 கோடி ரூபாயும், மாநில அரசின் சொந்த வரி அல்லாத வருவாயாக 20 ஆயிரத்து 223 கோடி ரூபாயும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க; அடுத்த 4 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது... வானிலை அலெர்ட்..!

கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசுக்கான வருவாயினங்கள் 10 புள்ளி ஒரு சதவிகிதம் அதிகரிக்கும் என்றும், அரசின் சொந்த வரிகள் வாயிலாக பெறப்படும் வருவாய் 19 புள்ளி 3 சதவிகிதம் வரை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் எந்தெந்த வகைகளின் மூலம் கிடைக்கிறது என்று பார்க்கும் போது வணிக வரிகள் மூலம் 73 புள்ளி 3 சதவிகிதமும், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவு மூலம் 14 புள்ளி ஒரு சதவிகிதமும், மாநில ஆயத்தீர்வை மூலம் ஆறு புள்ளி ஐந்து சதவிகிதமும், வாகனங்கள் மீதான வரிகள் மூலம் 4 புள்ளி ஒன்பது சதவிகிதமும், இதர வரிகள் மூலம் ஒன்று புள்ளி 2 சதவிகிதமும் அரசுக்கு சொந்த வரி வருவாயாக கிடைக்கிறது.

இதேபோல் அரசுக்கான வருவாய் செலவினமாக, 3 லட்சத்து 8 ஆயிரத்து 55 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் உதவித்தொகை மற்றும் மானியங்களுக்காக ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 990 கோடி செலவிடப்பட உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக அரசு ஊழியர்களுக்கான சம்பளமாக 77 ஆயிரத்து 322 கோடியும், கடன்களுக்கான வட்டியாக 55 ஆயிரத்து 450 கோடி ரூபாயும், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்காக 36 ஆயிரத்து 967 கோடி ரூபாயும், செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக 16 ஆயிரத்து 327 கோடி ரூபாயும் செலவிடப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: TN Budget 2023