முகப்பு /செய்தி /வணிகம் / Tamil Nadu Budget 2023 - 24 : வருவாய் பற்றாக்குறை 30 ஆயிரம் கோடி குறைந்துள்ளது - நிதியமைச்சர் பிடிஆர்

Tamil Nadu Budget 2023 - 24 : வருவாய் பற்றாக்குறை 30 ஆயிரம் கோடி குறைந்துள்ளது - நிதியமைச்சர் பிடிஆர்

தமிழக பட்ஜெட்

தமிழக பட்ஜெட்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி மூலம் பெண்கள் மேம்பாடு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

  • Last Updated :
  • Chennai [Madras], India

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2023 - 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையும் அவ்வாறே பட்ஜெட் தாக்கலானது.

பட்ஜெட் தாக்கலின் போது  எதிர்க்கட்சித் தலைவர் மீது வழக்கு பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சபாநாயகர் ஈடுபட்டார். இருப்பினும் இருக்கையில் இருந்து எழுந்து அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பேசுகையில் “சமூக நீதியை உறுதி செய்வதற்கான தொலைநோக்கு பார்வையை உறுதி செய்யும் வகையில் திராவிட மாட்டல் ஆட்சி வெற்றி நடை போட்டு வருகிறது. நாட்டிற்கு கலங்கரை விளக்கமாக தமிழகம் திகழ்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியவரால் வழிநடத்தப்பட்ட திராவிட இயக்கம் சுயமரியாதை சிந்தனையை தமிழகத்தில் நிலைநாட்டியுள்ளது.

பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி மூலம் பெண்கள் மேம்பாடு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. சாதனைகளை கொண்டாடும் வேளையில் உக்கரையில் தொடரும் போர், உலக பொருளாதாரத்தில் நிதி பிரச்சினையை வரும் நிதியாண்டில் எதிர்நோக்கி உள்ளோம்.

வருவாய் பற்றாக்குறையை கணிசமாக குறைத்துள்ளோம். முன் எப்போதும் இல்லாத அளவில் கடினமான சீர்திருத்தங்களை மேர்கொண்டோம்.62 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையிலிருந்து. 30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம். அரசு பதவியேற்ற போது நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணம் அதற்கு முந்தைய ஆண்டுகளில் வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியே ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு எடுத்த முயற்சியின் காரணமாக முன்னேற்றம் கண்டு வருகிறோம்.கோவிட், சென்னை பெருவெள்ளம் ஆகிய நேரங்களிலும் சிறப்பாக கையாண்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றினார். வரும் ஆண்டுகளிலும் அதேபோல் செயல்பட முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிதி நெருக்கடி இருந்த போதும் சமாளிக்கப்பட்டுள்ளது.” என்று பேசினார்.

top videos
    First published:

    Tags: Minister Palanivel Thiagarajan, Tamil News, TN Budget 2023