முகப்பு /செய்தி /வணிகம் / தேனாம்பேட்டை டூ அண்ணாசாலை வரை 4 வழி மேம்பாலம் - சென்னைவாசிகளுக்கு குட் நியூஸ் சொன்ன பிடிஆர்

தேனாம்பேட்டை டூ அண்ணாசாலை வரை 4 வழி மேம்பாலம் - சென்னைவாசிகளுக்கு குட் நியூஸ் சொன்ன பிடிஆர்

தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்பு

தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்பு

Tamil Nadu Budget 2023 - 24 :வடசென்னை வளர்ச்சி திட்டம் என்னும் திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

வடசென்னை வளர்ச்சி திட்டம் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2023 - 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது வடசென்னை வளர்ச்சி திட்டம் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றார். வட சென்னையில் போதிய அளவில் அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் உள்ளது. வடசென்னை வளர்ச்சி திட்டம் என்னும் திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

இதையும் படிங்க : தமிழ்நாடு பட்ஜெட் LIVE: தேனாம்பேட்டை முதல் அண்ணாசாலை வரை நான்கு வழி சாலை மேம்பாலம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

top videos

    முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 521 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை முதல் அண்ணாசாலை வரை நான்கு வழி சாலை மேம்பாலம் கட்டப்படும். சென்னை மெட்ரோ ரயில் சுரங்க பாதைக்கு மேல் கட்டப்படும் இந்த மேம்பாலம் சாதனையாக அமையும். இதனால் சாலைப்போக்குவரத்து நெரிசல் குறையும். மழைக்காலங்களில் பயணம் தடைபடாமல் இருப்பதற்கு, 996 மதிப்பில் கோடி 215 தரைப்பாலங்களுக்கு பதிலாக உயர்மட்ட சாலைகளாக மாற்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

    First published: