முகப்பு /செய்தி /வணிகம் / Tamil Nadu Budget 2023-24; சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளி, வெளிநடப்பு..!

Tamil Nadu Budget 2023-24; சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளி, வெளிநடப்பு..!

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்

நிதியமைச்சர் பட்ஜெட் வாசிக்க ஆரம்பித்த நிலையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையை வாசிக்க ஆரம்பித்ததும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

மதுரையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அவர்களிடம் சபாநாயகர், பட்ஜெட் வாசித்து முடித்த பிறகு உங்கள் கோரிக்கைகள் கூறுங்கள் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க தமிழ்நாடு பட்ஜெட் 2023 - உடனுக்குடன் தகவல்கள்

top videos

    எனினும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் உரையைத் தவிர வேறு எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என சபாநாயகர் அறிவித்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    First published:

    Tags: TN Budget 2023