முகப்பு /செய்தி /வணிகம் / ஆதிதிராவிடர் நலத் துறைக்கு நிதி குறைக்கப்பட்டதா? தமிழ்நாடு அரசு விளக்கம்..!

ஆதிதிராவிடர் நலத் துறைக்கு நிதி குறைக்கப்பட்டதா? தமிழ்நாடு அரசு விளக்கம்..!

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்

Tamil Nadu budget 2023 - 24 | பட்ஜெட்டில் குறிப்பிட்ட துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில் என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த 2022-23-ல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 4 ஆயிரத்து 282 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2023-24-ம் நிதியாண்டுக்கு 3 ஆயிரத்து 513 கோடி ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

ஆனால், உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிதியையும் சேர்த்தால் இத்துறைக்கான ஒதுக்கீடு 4 ஆயிரத்து 352 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டம், புதிரை வண்ணார்கள் நலவாரியம், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்,  மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் புதிய விடுதிகள் கட்டுவதற்கு என மொத்தம் ஆயிரத்து 210 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.

மேலும், திமுக அரசில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்தால் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இழப்பு குறைந்துள்ளது.  இதன் காரணமாக கடந்த நிதியாண்டில் 13 ஆயிரத்து 108 கோடியாக இருந்த இழப்பீடு மானியம், 2023-24-ம் ஆண்டுக்கு ஆயிரத்து 523 கோடியாக குறைந்துள்ளது. இதுவே, இந்த ஆட்சியின் திறமையான மேலாண்மைக்கு எடுத்துக்காட்டு எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

top videos

    அத்துடன், ஊரக வளர்ச்சித் துறைக்கான ஒதுக்கீடு 9 புள்ளி 44 சதவீதம் அதிகரித்து 29 ஆயிரத்து 162 கோடியாக இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: TN Budget 2023