முகப்பு /செய்தி /வணிகம் / Tamil Nadu Budget 2023-24 : சென்னை அடையார், கூவம் ஆறுகளைச் சீரமைக்க 1,500 கோடி ஒதுக்கீடு..!

Tamil Nadu Budget 2023-24 : சென்னை அடையார், கூவம் ஆறுகளைச் சீரமைக்க 1,500 கோடி ஒதுக்கீடு..!

தமிழக பட்ஜெட்

தமிழக பட்ஜெட்

Tamil Nadu Budget 2023 -24 : சென்னை அடையார் மற்றும் கூவம் ஆறுகளைச் சீரமைக்க நிதி ஒதுக்கி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் பொதுப் பணித்துறை கீழ் நகர்ப்புற மேம்பாட்டிற்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் நீர்வழிகள் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் சென்னையின் முக்கிய ஆறுகளாகத் திகழும் அடையார் மற்றும் கூவம் ஆறுகளை மேம்படுத்த ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர் அறிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து, அம்ருத் 2.0 திட்டத்தில் கழிவுநீர் அகற்றுதல், நீர்நிலைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக 612 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்திற்கு 6600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோவையில் 172 கோடி மதிப்பில் 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும், தமிழகத்தில் 1424 கி.மீ மண் சாலைகள் தரமான சாலைகளாக மேம்படுத்தப்படும், பொதுக் கழிப்பறைகள் 430 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்ற முக்கிய அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது.

Also Read : UPSC தேர்வு பயிற்சியில் சேர்ந்தால் ஊக்கத்தொகை.. குட் நியூஸ்

top videos

    சென்னையைப் பொருத்தவரை தீவுத்திடலில் நகர்ப்புற பொது சதுக்கம், திறந்தவெளி திரையரங்கம் போன்றவை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணகி நகர், அத்திப்பட்டு போன்ற இடங்களை சீரமைக்கத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Chennai, TN Budget 2023