Personal Loan : பர்சனல் லோன்ஸ் (Personal loans) அதாவது தனிநபர் கடன்கள் என்பவை ஒரு தனிநபர் தனது செலவுகளை சமாளிக்க பயன்படுத்த கூடிய சிறந்த நிதி கருவிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த வகை லோன்களில் வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவுகள், சர்வதேசப் பயணம் மேற்கொள்ள என ஒருவர் தனது தனிப்பட்ட செலவுகளுக்காக வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் கடன் பெறுகிறார்.
பண பற்றாக்குறையை பூர்த்தி செய்ய பர்சனல் லோன் என்பது பயனுள்ளதாக இருக்கும். தனிநபர் கடன்கள் பொதுவாக Unsecured வகையை சேர்ந்தது. அதாவது இந்த கடனைப் பெற நீங்கள் அடமானம் அல்லது பிணை வழங்க வேண்டியதில்லை. இருப்பினும் தனிநபர் கடன் குறித்து கருத்தில் கொள்ள பல்வேறு விசயங்கள் உள்ளன. இவை உங்கள் பட்ஜெட்டை தொந்தரவு செய்ய கூடும். எனவே நீங்கள் பர்சனல் லோன் எடுக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய கட்டணங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
லோன் ப்ராசஸிங் சார்ஜ்ஜஸ்: கடன் செயலாக்க கட்டணம் (Loan Processing Charges) என்பது கடன் விண்ணப்பத்தை ப்ராசஸ் செய்ய வங்கியால் விதிக்கப்படும் அடிப்படை கட்டணமாகும். இந்த கட்டணங்களில் அப்ளிகேஷன் ப்ராசஸிங், டாக்குமென்டேஷன், கிரெடிட் அப்ரைசல், லீகல் வெரிஃபிகேஷன் மற்றும் நிர்வாக செலவுகள் உள்ளிட்டவை அடங்கும்.
வெரிஃபிகேஷன் சார்ஜ்ஜஸ்: கடன் வழங்கும் முன் ஒரு தனிநபரின் கடனை திருப்பிச் செலுத்தும் திறன் குறித்து வங்கி சரிபார்க்க வேண்டும். இந்த வெரிஃபிகேஷன் நோக்கத்திற்காக, வங்கி கடன் கேட்பவரின் பேக்ரவுண்டை செக் செய்ய ஒரு தேர்ட் பார்ட்டி ஏஜென்சியை அணுகும். இந்த ஏஜென்சி கடனுக்கு விண்ணப்பித்த நபரின் கிரெடிட் ஸ்கோர்ஸ் மற்றும் ஏற்கனவே வாங்கிய கடன்களை எவ்வாறு திருப்பி செலுத்தி உள்ளனர் என்பதையெல்லாம் சரிபார்க்கிறார்கள். சுருக்கமாக சொன்னால் கடன் விண்ணப்பத்தில் நீங்கள் வழங்கி இருக்கும் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவலை சரிபார்ப்பதற்காக வங்கிக்கு நீங்கள் கொடுக்கும் கட்டணத்தை இது குறிக்கிறது. வங்கிக்கு கூடுதல் செலவு என்பதால் இந்த கட்டணத்தை கடனுக்கு விண்ணப்பிப்பவரே ஏற்க வேண்டியதாகிறது.
EMI-ஐ தாமதமாக செலுத்தினால் அபராதம்: ஒருவர தனிநபர் கடனை தேர்ந்தெடுக்கும் போது, கடன் தொகையை EMI வடிவில் திருப்பிச் செலுத்த வேண்டும். அந்த வகையில் EMI-க்களை ஒப்பந்தத்தில் உள்ளபடி சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதி செய்வது கடன் வாங்கியரின் முக்கிய பொறுப்பாகும். ஒப்பந்தத்தின்படி குறித்த நாளுக்குள் EMI செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படலாம்.
GST வரி: கடன் அனுமதி அல்லது திருப்பிச் செலுத்தும் காலத்தில் வாடிக்கையாளருக்கு ஏதேனும் கூடுதல் சேவை தேவைப்பட்டால், GST வரி வடிவில் சிறிய கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
இதையும் வாசிக்க: வட்டி அதிகமா வேணுமா? எந்த சேமிப்பு சிறந்தது? தெளிவான விளக்கம் இதோ!
ப்ரீபேமென்ட் / ஃபோர்க்ளோஸர் பெனாலிட்டி: கடனை முன்கூட்டியே அடைப்பது என்பது கடனின் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன் கடன் தொகையை வாடிக்கையாளர் திருப்பி செலுத்துவதைக் குறிக்கிறது. பர்சனல் லோன் எடுத்த வாடிக்கையாளர் ஒருவர் கடன் காலத்திற்கு முன்பே கடனை முழுமையாக அடைப்பது வங்கிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். இந்த இழப்பை ஈடுசெய்ய கடனை முன்கூட்டியே அடைப்பதற்கு வங்கி அபராதம் விதிக்கலாம். கடனின் வகை, நிலுவையில் உள்ள கடன் தொகை மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் நேரத்தை பொறுத்து இந்த அபராத தொகை மாறுபடலாம். எனவே கடனைப் பெறுவதற்கு முன் கடன் ஒப்பந்தத்தை கவனமாகப் படித்து, முன்கூட்டியே கடனை அடைத்தால் வங்கி விதிக்கும் அபராத விதிமுறைகளைப் புரிந்து கொள்வது முக்கியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank Load, Personal Loan